tamilnadu

img

மாதர் சங்க நடைபயண தலைவர்களுடன் பேசுக!

கொட்டும் மழையிலும் குடைகளை ஏந்தி... (திருவண்ணாமலையிலிருந்து)

கடலூர், நவ. 27- வன்முறையில்லா - போதையில்லா தமிழ கம் என்ற முழக்கத்தோடு நடைபயணம் மேற்கொண்டுள்ள மாதர் சங்கத் தலைவர் களுடன் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூரில் புதனன்று (நவ.27) செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழக வரலாற்றிலேயே பெண்களால் 400 கி.மீ  நடைபயணம் என்பது முதன் முறை யாக கடலூர் மாவட்டத்தில் இருந்தும், திரு வண்ணாமலை மாவட்டத்தில் இருந்தும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போதை இல்லா தமிழகம், பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழ கத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியப் பயணத்தை மாதர் சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர். 

இந்தியாவில் பாஜக தலைவர்கள் மீது  அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல முன்னாள் அமைச்சர்கள் இந்நாள் அமைச்சர்களே பாலியல் புகாரில் கைது செய்யப்படுகிற அளவுக்கு ஒரு மோசமான அநாகரிகமான கட்சியாக பாஜக மாறியிருக்கிறது. அதேபோல தமிழகத்தில் இருக்கும் அதிமுக அரசு பாலியல் வன்கொடுமை களை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக குற்ற வாளிகளைப் பாதுகாப்பதில் கண்ணுங் கருத்துமாக செயல்படக்கூடிய அரசாக இருக் கிறது. பாலியல் புகாரில் காவல்துறை அதி காரிகளே சம்பந்தப்பட்டு வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் பெண்கள் மீதான, குழந்தைகள் மீதான பாலி யல் புகார்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கு எதிரான மகத்தான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இந்த பிரச்சார நடைபயண இயக்கத்திற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவளிக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் இதை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல், இந்த  நடைபயணம் மேற்கொண்டுள்ள தலைவர் களை அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

குற்றவாளி கூண்டில் பாஜக...

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஒரு அரசியல் அட்டூழியத்தை அரங்கேற்றி யிருக்கிறது. அந்த மாநில ஆளுநர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் உள்பட அனைவருமே இன்று குற்றவாளிக் கூண்டில் இருக் கிறார்கள். நாடாளுமன்றத்தில் மோடி அர சியல் சாசனத்தை பெருமையோடு பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மகாராஷ் டிராவில் அரசியல் சாசனத்தை காலில் போட்டு  மிதித்து விட்டனர். பெரும்பான்மை இல்லாத ஒரு அரசுக்கு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் போது எப்படி ஆளுனர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்?

விலைக்கு வாங்கி ஆட்சி... 

குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெற வேண்டும் என்று சொன்னால் மத்திய  அமைச்சரவைக் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நள்ளிரவு 12 மணிக்கு மேல் மோடி தனது அதிகாரத்தை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி என அறிவிக்கப்படுகிறது. எதை வேண்டு மானாலும் செய்யலாம், எந்த வரைமுறையும் நெறிமுறையும் இல்லாத ஒரு ஆட்சியை பாஜக மேற்கொண்டுள்ளது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான் பல மாநிலங்களில் மைனாரிட்டியாக இருக்கும் பாஜகவினர், வேறு கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உள்ளாட்சித்தேர்தல்:  சிதம்பர ரகசியம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பது சிதம்பரம் ரகசிய மாக நீடித்துக் கொண்டே இருக்கிறது. அதி முகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவு போல் உள்ளாட்சித் தேர்தல் முடிவு அமைந்து விடுமோ என்ற அச்சம் அதிமுகவிற்கு உள்ளது. விருப்பப் மனுவை வாங்கி விட்டு பின்னர் மறைமுகத் தேர்தல் நடத்து வதற்கான சட்டத்தை நிறைவேற்றி உள்ள னர். தேர்தலை எப்படியாவது தள்ளிப் போட வேண்டும், நீதிமன்றத்திற்கு முன் தன்னை  குற்றவாளியாக காண்பித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக சில குழப்பங்களை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின் போது மாவட்டச் செயலா ளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, எம்.மருதவாணன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.