tamilnadu

img

கோவையில் 20 நொடிகள் மட்டுமே தெரிந்த சூரிய கிரகணம்

கோவை, டிச.26 -  கோவையில் வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்டதால் வானில் நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்றான வளைய சூரிய கிரகணத்தை பார்க்க ஆவலோடு காத்தி ருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பூமியின் துணைக்கோளான நிலவு, பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வரு கின்றது. அதேபோல், சூரியனை, பூமி நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இந்த இயற்கையான நிகழ்வில், சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு  வரும்போது, நிலவு, சூரியனை மறைக்கி றது. இதனால், நிலவின் நிழல் பூமியில் விழும்போது, சூரியன் மறைந்துபோகிறது. இதைத்தான் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.

இந்த நிலையில், வியாழனன்று காலை சுமார் 8 மணியளவில் நிலவு, சூரியனை மறைக்கத் தொடங்கியது. இந்த சமயம் சூரி யன் பிறைவடிவில் காட்சியளித்தது. கோவை, அவிநாசி, ஈரோடு, கரூர், திருப் பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்க்க,  டெலஸ்கோப், பைனாகுலர் உள்ளிட்ட வற்றோடு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. கோவை மாவட்டத்தில் மட் டும் 20 இடங்களில் பொதுமக்கள் கிரக ணத்தைப் பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டு இருந்தது.  இந்நிலையில், கோவையில் வளைய சூரிய கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் 15 நொடி கள் மட்டுமே பார்க்க முடிந்தது. இதனால் சூரிய கிரகணத்தை பார்க்க ஆவலோடு காத்திருந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேசமயம், நெருப்பு போல வளை வடி வில் காணப்பட வேண்டிய சூரிய கிரகணம் கோவையில், பிறை வடிவமாகவும் பின்னர் வளை வடிவாகவும் வெள்ளை நிறத்தில் காட்சி தந்து காத்திருந்த பொதுமக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதேநேரம், கோவையில் வெள்ளை வடிவில் வளை வடிவ சூரிய கிரகணம் தென்பட்டது தனி சிறப்பு என்று மாவட்ட அறிவியல் மைய அலுவலர் பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை பங்கஜமில் மைதானத்தில் அரிய வளைய வடிவ சூரிய கிரகணத்தை பார்க்க ஆர்யபட்டா அறிவியல் கிளப் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சிறார்களுக்கு சோலார் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று சூரிய கிரகணத்தை பார்க்க ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

மூட நம்பிக்கையை கைவிட விருந்துண்ணும் நிகழ்வு

வளைய சூரிய கிரகணம் வியாழனன்று வானில் தெரிந்தது. இந்த கிரகணத்தை காண பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கிரகணத்தை வெறும் கண்களால் அல்லது ஏதேனும் கண்ணாடிகளால் பார்க்கக்கூடாது என அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். அறிவியல் ஆய்வுகள் பல இருந்தாலும் இன்றும் மக்களிடையில் மூடநம்பிக்கைகள் புதைந்துள்ளன. கிரகணத்தன்று கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது, சூரிய கிரகணம் முடியும் வரை உணவு அருந்தக்கூடாது, குழந்தைகள் யாரும் வெளியே வந்து விளையாடக்கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் பரவியுள்ளது.இந்த மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் வகையில், கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகம் மற்றும் பொள்ளாச்சி பகுதியில் கிரகணத்தன்று காலையில் 50க்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிட்டனர். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர்  கழகத்தின் செயலாளர் கு.இராம கிருட்டிணன் கூறியதாவது, இந்த சூரிய கிரகணமானது அறிவியல் முறைப்படி மிகவும் வியக்கத்தக்க ஒன்று என்றும், ஆனால் அதை சில மதவாதிகள் மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் அதை ஓர் தீய நிகழ்வு என்பது போல் மக்களிடையே சித்தரித்துள்ளனர் என்று கூறினார்.  சூரிய கிரகணத்தன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது, குழந்தைகள் வெளியே விளையாடக்கூடாது, சூரிய கிரகணம் முடியும் வரை உணவு அருந்தக் கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் மக்களிடம் பரவலாக இருந்து வருவதாக தெரிவித்தார். மேலும், ஆன்மீக ரீதியில் பார்த்தால் கடவுளே இல்லை என்றால் ஒரு அணுவும் அசையாது என்று பலர் கூறும் நிலையில், இந்த சூரிய கிரகணத்தன்று கடவுளுக்கே ஆபத்து என்று கூறுவது எவ்வகையில் ஏற்கத்தக்கது என்று கேள்வி எழுப்பினார். எனவே இந்த மூடநம்பிக்கைகளை எதிர்க்கின்ற வகையில் சூரிய கிரகணம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே உணவருந்தி மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார்.

 

;