tamilnadu

img

இறால் பண்ணைகளால் வாழ்வாதாரம் இழக்கும்

தரங்கம்பாடி கடலோரப் பகுதி விவசாயிகள்

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம் பாடி கடலோரப் பகுதிகளில் இயங்கி  வரும் இறால் பண்ணைகளால் விவ சாயம் மற்றும் நிலத்தடி நீர் மாசு பட்டு வாழ்வாதாரம் முற்றிலும் சீரழிந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் கூறுகின்றனர். சுனாமி பேரழிவுக்கு முன்பு வரை கடற்கரையை ஒட்டிய சில மீட்டர் தூரங்களிலேயே விவசாயம் செய்யப் பட்ட நிலையில், சுனாமிக்கு பின்னர் நிலங்கள் சிறிதளவு உப்புத் தன்மை உடையதாக மாறியதை பயன் படுத்திக் கொண்ட பணமுதலைகள் கடற்கரை கிராமங்களில், இறால் பண்ணைகளை அமைக்க துவங்கினர். அப்பகுதிகளில் உள்ள ஆறு களில் இயற்கையாக கிடைக்கும் இறால்களை பிடித்து மீனவர்கள் விற்பனை செய்து வந்ததை பயன்படுத்திக் கொண்டு, உலக அளவில் வெள்ளை இறால்களின் கிராக்கியை உணர்ந்து, செயற்கை இறால் பண்ணைகளை அதிகமாக அமைத்தனர்.  நிலங்களில் உப்புத்  தன்மை உடையதாக மாறிய பிறகு விவசாயம் செய்யலாம் என எண்ணி யிருந்த விவசாயிகள், இறால் பண்ணை உரிமையாளர்களின் அதிகாரப் பிடிக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் விவசாயத்தை முற்றும் துறந்தனர்.

செயற்கை பண்ணையில் வளரும் இறால் வேகமாக வளர உப்பு  நீர், நல்ல நீர், மண் வளம், காற்றோ ட்டம் ஆகியவை மிக முக்கியம். 1050 கிலோ மீட்டர் கடற்கரையை கொண்டுள்ள தமிழகத்தில் செயற்கை இறால் வளர ஏற்ற இடம் மரக்காணம் என்பதை தெரிந்து கொண்டு பண்ணைகளை அமைத் தார்கள்.  ஆந்திர மாநிலம் கோதா வரியில் இருந்து ‘டைகர்’ எனப்  படும் இறாலை கொண்டு வந்து மரக்காணத்தில் உள்ள பொறிப்பகத் தில் இனப்பெருக்கம் செய்து, பிறகு  பண்ணையில் வளர்த்து விற்பனை செய்கிறார்கள். இந்த இறால் குஞ்சுகளை தமிழகத்தில் உள்ள இறால் பண்ணை உரிமையாளர்கள் வாங்கி வந்து இறால் வளர்ப்பில் ஈடுபட தொடங்கினர். 

பண்ணைகளில் விடப்பட்ட இறால் குஞ்சுகளுக்கு தீவனம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு மூன்று மாதத்திற்கு பிறகு இறால்களை பிடித்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய் கின்றனர். இந்த இறால் வளர்ப்பால் தரங்கம்பாடி கடலோர காவிரியின் கடைமடை பகுதிகளான சந்திரபாடி, தரங்கம்பாடி, வேப்பஞ்சேரி, மரு தம்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற் பட்ட இடங்களில் கடல் மற்றும் ஆறு களில் இருந்து மோட்டார்கள் மூலம் உப்பு கலந்த தண்ணீரைக்கொண்டு இறால் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் கழிவுகளையும் ஆறு களில் விடுவதால் ஆறுகளில் உள்ள மீன் வளம் பாதிப்பதோடு, கடலில் அந்த நீர் கலப்பதால் கடல் வளமும் பாதித்துக் கொண்டே வரு கிறது. இறால் வளர்ப்பினால் அரு கிலுள்ள விவசாய விளை நிலங் களில் உப்பு நீர் கலப்பதால், விவ சாயம் முற்றிலும் அழிந்து வரு கிறது. மேலும் இப்பகுதிகளில் 30 முதல் 40 அடி வரை நல்ல குடிநீர் கிடைத்ததாகவும் தற்போது உப்பு நீராக மாறிவிட்டதாகவும் இப்பகுதி மக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர். இறால் பண்ணைகளால் விவ சாயம் மற்றும் நிலத்தடி நீர் மாச டைந்து வருவதால் இப்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை மூட வேண்டும் என்பது விவ சாயிகளின் தொடர் கோரிக்கை யாக உள்ளது. 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கூறுகையில், “கடற் கரையை ஒட்டிய பகுதிகளில் உப்பு நீர்தான் கிடைக்கும் என்பதற்கு விதிவிலக்காக தரங்கம்பாடி தாலுகா கடற்கரை பகுதிகளில் முப்போகம் நெல் விளையக் கூடிய சுத்தமான நிலத்தடி நீர் இருந்தது. இறால் பண்ணைகளால் இப்பொழுது எங்கு பார்த்தாலும் ரசாயனம் கலந்த உப்பு நீர்தான் கிடைக்கி றது. ஒவ்வொரு பண்ணையும் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் கரிப்பு நிறைந்த ரசாயன தண்ணீரை கடலிலும், நிலத்தி லும் திறந்துவிடுவதால் மணல் சூழ்ந்த இப்பகுதி, ரசாயன நீரை முழுவதுமாக உறிஞ்சி நிலத்தடி நீர் முழுவதும் நஞ்சாகியுள்ளது.

கடலில் கலக்கும் ரசாயன நீரால், கரையோரத்தில் கிடைக்கக் கூடிய சிறிய ரக மீன்கள் அழிந்து வருகின்றன. இறால் பண்ணைகளில் திறந்து விட்ட நீர், ஆறு மற்றும் வாய்க் கால்களில் கலப்பதால் மாசடைந்து விவசாய நிலத் திற்குள் புகுந்து நிலத்தின் தன்மையை சீரழிக்கிறது.  இப்படி தனிமனிதர்களின் வாழ்வுக்காக இப்பகுதியின் இயற்கை வளங்கள் மற்றும் விவசாயம் சீரழிந்து வருவதாக குற்றம்சாட்டினார். இங்குள்ள பெரும்பாலான இறால் பண்ணைகள் ஆறு, குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து சமய அறநிலையத் துறைக் ்குட்பட்ட கோவிலுக்கு சொந்த மான 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தி லும் ஆக்கிரமித்து இறால் பண்ணை நடத்தி லாபம் கொழிக்கிறார்கள்.

தரங்கம்பாடி கடலோரப் பகுதிகளில் வளத்தை அழித்து இறால் வளர்க்கப்பட்டாலும், உள்ளூர் மக்களுக்கு நல்ல இறால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. ஆரோக்கியமான இறால்களை எல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, நோய் தாக்கிய இரண்டாம் தர இறால்களை மட்டுமே உள்ளூர் மக்களுக்கு விற்பனை செய்வ தாகவும் மக்கள் தெரிவிக் கின்றனர். அழுகிய இறால்களை அப்புறப்படுத்தாமல் நிலத்தி லேயே கொட்டிவிடுவதால் இயற்கை சூழலை தேடிவரும் அரிய வெளிநாட்டு பறவைகள் அவற்றை தின்று இறக்க நேரிடுகிறது.  இவ்வளவு குற்றச் சாட்டுகள் இருந்தும் இந்த பண்ணைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள் பொதுமக்கள்.  மக்களின் வாழ்வாதாரத்தை பாழாக்கும் இறால் பண் ணைகளை மூட அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் போராட்டங்கள் எழுவதை தடுக்க முடியாது.

;