tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு... அரசியல் நையாண்டி

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் :- தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும்.
ச.சா - லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை தாரை வார்த்தது போதாதோ..??
------
செய்தி :- அடுத்த கட்டமாக நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த அரசு திட்டம் என்று தகவல்.
ச.சா - தவணை முறைல நடத்துனாலும் ஜெயிக்க முடியாதுன்னு புரியலையோ...??
------
தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ :- சிறுபான்மையினரைப் பாதிக்கும் எந்த அம்சத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தாது.
ச.சா - நீட்ல துவங்கி பல அம்சங்கள்லயும் நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கலையே..??
----------
பாஜக :- குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் புறக்கணிப்பது அரசியலமைப்புக்கு எதிரான செயல்.
ச.சா - அந்த சட்டமே அரசியலைமைப்புக்கு எதிரானதாமே..??

;