tamilnadu

img

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்:

25 சதவீத இடங்களை நிரப்புவது குறித்து  அறிவிப்பு வெளியிடக் கோரி வழக்கு

சென்னை, ஆக.1- இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சத வீத ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு உடனடியாக அறிவிப்பு வெளி யிட வேண்டும் என்று வலியுறுத்தி  உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஜெ.முகம்மது ரசின் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு மனுவில், கொரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே பள்ளிகள் மூடப்பட்டு, எப்போது திறக்கப்படும் என முடிவெடுக்கப் படாத நிலை உருவாகியுள்ளது. இந்த ஆண்டு இல வச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள இடங்கள் எவ்வாறு நிரப்பப்படும்? என தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்போ அல்லது தெளிவுபடுத்து தலையோ வழங்கவில்லை. எனவே, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவிகித இல வச மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்புவதற்கான நடைமுறைகளையும், கால அட்டவணையையும் தமி ழக அரசு வெளியிட உத்தரவிட வேண்டும். அவற்றைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்ப ரப்படுத்த வேண்டும். நுழைவு நிலை வகுப்புகளான எல்.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பு இடங்களில் 25 சத வீத இடங்களை ஒதுக்கிவைக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;