tamilnadu

img

காலமுறை ஊதியம் அரசுக்கு பரிந்துரை

சென்னை, ஆக. 20- காலமுறை ஊதியம் வழங்க  அரசுக்கு பரிந்துரை செய்யப்ப டும் என்று சங்கத் தலைவர்களி டம் டாஸ்மாக் மேலாண் இயக்கு நர் உறுதி அளித்தார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சட்டப்படியான நிலை யாணை உருவாக்கும் வரை மாதிரி நிலையாணை சட்டம், தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும், 923 இள நிலை உதவியாளர், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள் உள் ளிட்ட பணியிடங்களை உபரி ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்; எஞ்சியுள்ளவர்களை அரசுத்துறைகளுக்கு மாற்ற வேண்டும். முறைகேடான கடை ஆய்வு அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், தினசரி விற்பனைத் தொகையை  நிர்வாகமே வந்த  வசூலிக்க வேண்டும், கடைக ளுக்கு சிசிடிவி, குளிரூட்டி உள்  ளிட்ட உபகரணங்களை வழங்க  வேண்டும், சுழற்சி முறையில் பணி யிட மாறுதல் தர வேண்டும்.

உரிமம்பெறாமல் சட்ட விரோதமாக மதுக் கூடங்களை நடத்துபவர்களை விட்டுவிட்டு, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும், காலி அட்டைப் பெட்டி விற்ப னையை நிர்வாகமே தனது சொந்த  பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கை செவ்வாயன்று (ஆக.20) சென்னை எழும்பூரில்  உள்ள டாஸ்மாக் தலைமை அலுவ லகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) சார்பில்  நடைபெற்ற இந்தப் போராட்டத் தில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே டாஸ்  மாக் மேலாண் இயக்குநர் கிரி லோஷ் குமார், பொது மேலாளர் ஜெயபாலன் ஆகியோர் சங்கத்  தலைவர்களை பேச்சு வார்த் தைக்கு அழைத்தனர்.

பேச்சுவார்த்தையில் சம் மேளன பொதுச் செயலாளர் கே.  திருச்செல்வன், சிஐடியு தென் சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், டாஸ்மாக் சம்மேளன பொருளாளர் ஜி. சதீஸ், துணைப் பொதுச் செயலா ளர் கே.பி.இராமு, நிர்வாகிகள் ஜான் அந்தோணிராஜ், வேல்முரு கன், சரவணன், பி.ராமு உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து தொழிலாளர் களிடம் பேசிய பொதுச் செயலா ளர் கே.திருச்செல்வன், “கால முறை ஊதியம் வழங்க அரசுக்கு  பரிந்துரைக்கப்படும், நிதித்துறை யில் நிலுவையில் உள்ள சட்டப்  படியான நிலையாணை விரை வில் ஒப்புதல் பெறப்படும், மாதம்  2 முறை ஊழியர் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தப்படும்.மனுக்கள்  மீது 15 நாட்களில் தீர்வு காணப்ப டும், விற்பனை பணத்தை நிர்வா கவே வசூலித்துக் கொள்ளும். கடைகளில் சிசிடிவி பொருத்தப்ப டும், அட்டை பெட்டி விற்பனைக்கு  புதிதாக ஏலம் விடப்படும் என்று மேலாண் இயக்குநர் உறுதி அளித்துள்ளார். இதற்காக மண்டல மேலாளர்கள் கூட்டம் 28ந் தேதி நடத்த உள்ளதாக மேலாண் இயக்குநர் தெரிவித் துள்ளார்” என்று கூறினார்.  இத னையடுத்து போராட்டம் விலக் கிக் கொள்ளப்பட்டது.

;