tamilnadu

img

3 மாதத்திற்கு ரேஷன் பொருட்கள்: புதுவை அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி, மார்ச் 29- புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் மூன்று மாதங்களுக்கான  அரிசி மற்றும் உணவு தானி யங்களை அங்கன் வாடி மூலம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலா ளர் ஆர்.ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், நாடு  முழுவதும் கொரோனா தொற்று  நோய்க்கு எதிராக மத்திய மாநில  அரசுகளால் எச்சரிக்கை நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கேரளா மாநில இடது  முன்னணி அரசாங்கம் மக்கள் நலத்திட்டங்களை மேற்கொண்டு நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்திலும் 22 ஆம் தேதி முழு ஊரடங்கும் நடத்தி  பின்னர் அது ஏப்ரல் 14ஆம் தேதி  வரை ஊரடங்கு உத்தரவு  நீடிக்கப்  பட்டுள்ளது. அரசின் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கையால் அனைத்து பகுதி மக்களும் வீட்டிலேயே முடக்கப் பட்டுள்ளனர். புதுச்சேரியில் விவ சாய தொழிலாளர்கள், கட்டு மானம், முறைச்சாரா தொழிலா ளர்கள் அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்க்கையை நடத்தும் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் வருமானம் இன்றி தவித்து  வருகின்றனர்.

புதுச்சேரி அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயி ரம் என அறிவித் தது போதுமான தாக இல்லை. அங்கன்வாடிகள், நியாயவிலைக் கடைகள் செயல்  படாததால் அவர்களுக்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்கள் கிடைப்பதி லும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கன்  வாடி மையங்கள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் மூன்று மாதங்களுக்கான அரிசி, பருப்பு, கோதுமையை  உடனே வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போல் மருந்து, மற்றும் இதர செலவினங் களுக்கான மாதம் ரூ.2 ஆயிரம் விதம் அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க  வேண்டிய  உணவு தானியங் களை உடனடியாக வழங்க வேண்டும். அப்போது தான் அர சின் அறிவிப்பு சாத்தியமாகும்.

உணவு

அண்டை மாநிலங்களிலி ருந்து புதுச்சேரியில் குடி பெயர்ந்துள்ள தொழிலாளர்கள், வீடற்ற சாலையோரம் வசிப்பவர் கள், ஆதரவற்றோர்களுக்கு பேரி டர்துறை மூலம் உணவுகளை அரசே சமைத்து வழங்க வேண்டும்.

மாத ஊதியம்

புதுச்சேரி கடைகளில், சிறு- குறு தொழிற்சாலை களில் வேலை செய்து வரும் முறைச்சாரா தொழி லாளர்களுகள் விடுமுறையில் இருப்பதால் அவர்களுக்கான மாத ஊதியத்தை அந்த அந்த  வணிக நிறுவனங்கள், தொழிற்  சாலை நிர்வாகங்கள் வழங்கு வதை தொழிலாளர் நலத்துறை உத்தரவாதபடுத்த வேண்டும். பல்வேறு சிரமத்துடன் சேவைப்  பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்  துறை ஊழியர்கள், தூய்மை பணி ஊழியர்கள், பிற துறை களின் ஊழியர்களுக்கு தங்கு தடையின்றி பாதுகாப்பு கவ சங்கள், உபகரணங்களை வழங்க வேண்டும். இவ்வாறு ராஜாங்கம் தெரி வித்திருக்கிறார்.

 

;