tamilnadu

img

பொங்கல் தொகை ரூ.1000 சமூகநலத் திட்டமா? இல்லையா?

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கேள்வி

சென்னை, நவ. 28- அமலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளின்படி அரசாங் கங்கள்  செயல்படுத்தும் எந்த ஒரு சமூக நலன், வறுமை ஒழிப்பு, வளர்ச்சித் திட்டங்களி லும், மற்றவர்களுக்கு அளிப்பதைவிட,  மாற்றுத்திறனாளிகளுக்கு 25விழுக்காடு அளவு கூடுதலாக உயர்த்தி வழங்க  வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின்  மாநிலத்  தலைவர் பா.ஜான்ஸிராணி, பொதுச்செய லாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: 

மாற்றுத்திறன் பெண்களுக்கு  முன்னுரி மையுடன் 5 விழுக்காடு திட்ட அளவை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இதுகுறித்து ஏற்கனவே தெளிவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, கடந்த பொங்கலின்போதே எமது சங்கத்தின் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசு  கண்டுகொள்வில்லை.  சென்னை உயர்நீதி மன்றம் எமது சங்கத்தின் மனுவை பரிசீலிக்க  அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், மாற்றுத்  திறனாளிகள் சட்ட விதிகளை அமல்படுத்த  வேண்டிய மாற்றுத்திறனாளி நலத்துறைச் செயலாளர், “இத்திட்டம் சமூக நலத் திட்டமோ, வளர்ச்சி திட்டமோ இல்லை.  இது  ஒரு “பரிசுப் பை- கிப்ட் ஹம்பர்”.  எனவே, மாற்றுத்திறனாளிகள் சட்ட விதி இதற்கு பொருந்  தாது.  என உண்மைக்கு மாறாக கருத்து தெரி வித்து எமக்கு கடிதம்  எழுதினார்.  

அக்கடிதத்திற்கும் மறுப்பு தெரிவித்து எமது சங்கம் சார்பில் 30.04.2019 அன்று கடிதம்  எழுதப்பட்டது. மேலும், “கடந்த ஆண்டு வறட்சி காரணமாகவும், இந்த ஆண்டு மழை பெய்து, வேளாண் நடவடிக்கைகளுக்காக கையிலிருந்த பணத்தை மக்கள் செல வழித்துவிட்டதாலும், இந்த பண உதவி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறி வித்துள்ளார் என இந்த ஆண்டு அரசாணை  எண்.66 குறிப்பிடுகிறது.  எனவே, அனை வருக்கும் வழங்கப்படும் பணத்தொகை சமூக  நலன், வறுமை  ஒழிப்பு அல்லது வளர்ச்சி  திட்டமே ஆகும் என்பதால் பண உதவியில்  25  விழுக்காடு மாற்றுத்திறனாளி இடம்பெற் றுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுத லாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உரிய  உத்தரவிட வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;