tamilnadu

img

விலையில்லா தக்காளி: ஏரியில் வீசிய விவசாயிகள்

சேலம், மார்ச் 7- ஆத்தூர் அருகே தலைவாசல் சந்தையில் தக்காளிக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால் ஏரியில் தக்கா ளியை கொட்டி சென்றனர்.  சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள கருமந்துறை, முண்டியீர், கரி யக்கோவில், பகடுப்பட்டு, மணியார் குண்டம், கிளாக்காடு உள்ளிட்ட மலைப் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் கொடி தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு கல்வராயன் மலைப் பகுதியில் நல்ல மழை பெய்து, இத னால் தக்காளி நல்ல விளைச்சல் கண் டுள்ளது.

இங்கு விளையக்கூடிய தக்காளியை தலைவாசல் தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து மலைவாழ் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். இங்கு தக்காளியை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். இதனிடையே தமிழகத்தில் போதிய பருவ மழை பெய்ததை தொடர்ந்து அந்தந்த பகுதிகளிலேயே உள்ளூர் தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி கொள்முதல் செய்வதை வியாபாரி கள் தவிர்த்து வந்தனர்.  கடந்த சில  மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ  ரூ.20-க்கு விற்பனையான தக் காளி தற்போது ஒரு கிலோ 2 ரூபாய்க்கு  கூட விற்பனையாகவில்லை. இத னால் வேதனையடைந்த விவசாயிகள் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்த தக்காளிகளை அருகில் உள்ள ஏரியில் கொட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்யப்படுகிறது. இதை யடுத்து தக்காளியை அறுவடை செய்து  விற்பனைக்காக தலைவாசல் தினசரி சந்தைக்கு எடுத்து செல்லும் போது வியாபாரிகள் நிர்ணயம் செய்யும் விலைக்கே விற்பனை செய்யும் நிலை யில் உள்ளோம். இதனால் பெரும் நஷ் டம் ஏற்படுகிறது. எனவே, மலைவாழ் மக்களின் நலன் கருதி கருமந்துறை மலைப்பகுதியிலே காய்கறி சந்தை  மற்றும் தக்காளியை பதப்படுத்த குளிர் சாதன கிடங்கு அமைத்து தர வேண்டு மென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.