tamilnadu

img

சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பரப்புபவர்களின் பட்டியலை தயார் செய்க

 சைபர் கிரைம் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஜன.24- தமிழகம் முழுவதும் சமூக வலை தளங்களில் ஆபாசம் அவதூறு கருத்துக் களை பதிவு செய்வோரின் பட்டியலை சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஒருவர் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக கருத்து பதிவிட்ட சென்னையை சேர்ந்த மருதா சலம் என்பவரை, சைபர் கிரைம் போலீ சார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி மருதா சலம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, சமூக வலை தளங்களில் ஆபாசக் கருத்துக்களை பதிவு செய்தவர்களின் பட்டியலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தர விட்டிருந்தார். வெள்ளியன்று வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றது.அப்போது சைபர் கிரைம் போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

ஆனால் அறிக்கை திருப்தியாக இல்லை என்று நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். மேலும் தமிழகம் முழு வதும் ஆபாசக்கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவோரின் பட்டியலை தயாரித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மன்னிப்பு கடிதம் அளிக்கும் பட்சத்தில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

;