தமிழக பட்ஜெட் 2020-21
சென்னை, பிப். 14 - தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் 2020-21ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெள்ளியன்று (பிப்.14) துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசும் போது இதனைத் தெரிவித்தார். மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் 2 லட்சத்து 19 ஆயிரத்து 375 கோடி ரூபாயாகவும், மொத்த வருவாய் செலவினங்கள் 2 லட்சத்து 41 ஆயிரத்து 601 கோடி ரூபாயாக இருக்கும். இதனால் வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 என கணக்கிடப்பட்டுள்ளது என்று கூறினார்.சென்னை, பிப். 14 - தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் 2020-21ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெள்ளியன்று (பிப்.14) துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசும் போது இதனைத் தெரிவித்தார். மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் 2 லட்சத்து 19 ஆயிரத்து 375 கோடி ரூபாயாகவும், மொத்த வருவாய் செலவினங்கள் 2 லட்சத்து 41 ஆயிரத்து 601 கோடி ரூபாயாக இருக்கும். இதனால் வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 என கணக்கிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
2020-21 ஆம் நிதியாண்டின் திட்ட மதிப்பீடுகளில் மூலதனச் செலவுக்கு 37 ஆயிரத்து 728 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதால், மொத்த மாநில உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 59 ஆயிரத்து 346 கோடி ரூபாயாக இருக்கும். மாநில அரசு 62 ஆயிரத்து 758 கோடி ரூபாய் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும் வரும் நிதியாண்டில் 59 ஆயிரத்து 209 கோடி ரூபாயை கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. எனவே நிகர நிலுவை கடன் மதிப்பு 4 லட்சத்து 56 ஆயிரத்து 661 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மாநிலத்தின் நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7.27 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. எனவே, வரும் நிதியாண்டில் வலுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்ப்பார்ப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார். மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க தமிழ்நாடு நில உடைமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் உரிமைகளை முறைப்படுத்துதல் சட்டம்-2017ன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் பதிவு செய்ய வேண்டும். தற்போதுள்ள முத்திரைதாள் வரியினை 1 விழுக்காட்டிலிருந்து 0.25 விழுக்காடு வரை குறைக்கப்பட்டு, 5 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் வசூலிக்கப்படும். இதன்மூலம் 14 ஆயிரத்து 435 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசு பாரபட்சம்
இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட சராசரி உயர்வை விட, தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு மத்திய அரசு குறைவாகவே உயர்த்தி உள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரையின்படி 2020-21 நிதியாண்டில் நகர்ப்புற உள்ளட்சி அமைப்புகளுக்கான மானியம் ஆயிரத்து 737 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இது 2019-20 நிதியாண்டைவிட 31 விழுக்காடு குறைந்துள்ளது. நிதிக்குழு கையாண்ட தவறான கணக்கீட்டு முறையே இதற்கு காரணம். இதனை சரிசெய்ய நிதிக்குழுவிடம் முறையிடுவோம். அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் ஆகியவற்றின் கீழ் நிலுவையாக உள்ள 3 ஆயிரத்து 201 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். (இதே வாசகம் கடந்த நிதி நிலை அறிக்கையிலும் கூறப்பட்டிருந்தது) உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2019-20ம் ஆண்டிற்கான அடிப்படை மானியமான 4 ஆயிரத்து 345 கோடி ரூபாயும், 2017-18ம் ஆண்டு முதல்பெற வேண்டிய செயல்திறன் மானியமான 2 ஆயிரத்து 29 கோடி ரூபாயையும் (மொத்தத்தில் 9575 கோடி ரூபாயை) மத்திய அரசு வழங்காமல் உள்ளது என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.