சென்னை,ஜன.22- தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், தேவாரம், திருவாசகம் ஓதி நடத்தக் கோரிய வழக்கில் தலைமைச் செயலர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு புதனன்று(ஜன.22) நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தபோது, இந்த கோவில் தமி ழர்களின் அடையாளம் என்றும், இங்கு குட முழுக்கு விழா தமிழில் நடந்ததற்கான கல்வெட்டுச் சான்று இருப்பதாக மனு தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.