tamilnadu

img

பலம் பொருந்திய கட்சி

சிபிஎம் தலைவர்களிடம் பேசிய என்.சங்கரய்யா, இந்திய சுதந்திரத்தையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உள்ள பிரதானமான இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சி. இடதுசாரி, ஐக்கிய முன்னணி வளர்வதற்கான உறுதிமொழியை மத்தியக்குழு அளித்துள்ளது. பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதுபோல பிரம்மாண்டமான கட்சியாக நமது கட்சி வளரும். அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்றார். நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை படித்தேன். அனைத்து அம்சங்களும் கொண்டதாக, வல்லமைமிக்க ஒரு அறிக்கை தயாரிக்கக்கூடிய கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. அதனை நிறைவேற்ற கட்சி சகல துறைகளிலும் வளர வேண்டும். அதனை மாநிலத் தலைமை செய்ய வேண்டும் என்றார்.

;