சென்னை, ஜூலை 23- தமிழக துணை முதலமைச்சரும் மாநில நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் புது தில்லி சென்றுள்ளார். அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பிறகு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்தார். நிதி அமைச்சகம் அமைந்துள்ள தில்லி நார்த் பிளாக்கில் உள்ள நிர்மலா சீதாராமனின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடந்தது. அப்போது தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்கக் கோரும் கோரிக்கை மனுவை நிர்மலா சீதாராமனிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.