வண்ணாரப்பேட்டை தடியடி
சென்னை, பிப். 17- வண்ணாரப்பேட்டை தடி யடி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும் என்ற அரசின் பதில் திருப்தியளிக்க வில்லை என்பதால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட எதிர் கட்சி உறுப்பி னர்கள் தமிழக சட்டப்பேரவை யில் இருந்து வெளி நடப்பு செய்தனர். திங்களன்று கேள்வி நேரத் திற்கு பிறகு பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின், “குடியுரிமை சட்டம், என்பிஆர், என்ஆர்சி போன்ற வற்றை எதிர்த்து நமது தமிழக மும் தில்லியைப்போன்று ஒரு போராட்டக்களமாக மாறிக் கொண்டு வருகிறது”என்றார்.
தமிழகத்தில் பல நாட்களாக அமைதியாக, அறவழியில் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் சென்னை வண்ணாரப்பேட்டையிலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள், உட்புறச் சாலை யில்தான் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு கொடுத்த காவல்துறைக்கும் போராட்டம் நடத்தியவர்க ளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், திடீரென்று தடியடி நடத்துமாறு காவல் துறையை தூண்டிவிட்டது யார்? என்று கேள்வி எழுப்பிய அவர், இதுதான் புரியாத புதிராக இருக்கிறது என்றும் வன்முறை சம்பவம் நடந்த அந்த இடத்திற்கு முதலமைச்சரோ அமைச் சர்களோ உடனே சென்று மக்களை அமைதிப்படுத்தி யிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். வண்ணாரப்பேட்டையில் போராடியவர்கள் மீது போடப் பட்டுள்ள அனைத்து வழக்கு களையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் போராட்டம் நடைபெறும் இடங்களில் அமைதி திரும்புவதற்கான நட வடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர்ந்து பல போராட்டங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள மக்களை சந்தித்து 2 கோடிக்கும் அதிக மாக கையெழுத்து பெற்று அந்த படிவத்தை குடியரசுத் தலை வரிடம் கொடுப்பதற்காக விமா னம் மூலம் அனுப்பி வைத்து உள்ளோம். தில்லியில் வருகிற 19 ஆம் தேதி எங்கள் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் அந்த படிவங்களை குடியரசுத் தலை வரை சந்தித்து ஒப்படைக்க உள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த பாவத்திற் காக பெற்றோர், பிறந்த ஊர், பிறந்த தேதி கேட்டும் என்பிஆர் கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்தக்கூடாது. வழக்கமான மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்துங்கள். அதை நாங்கள் யாரும் எதிர்க்க வில்லை. ஆனால், சிறுபான்மை யின மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் துன்பப்படுத்தக்கூடிய என்பி ஆர் எடுக்க அனுமதியில்லை என்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலி யுறுத்தி மற்ற மாநிலங்களைப் போல் தமிழக சட்டப்பேரவை யிலும் இந்த கூட்டத் தொடரில் ஒரு தீர்மானத்தை கொண்டு வரவேண்டும். இதுதான் போராடி வரும் மக்களின் கோரிக்கையும்கூட என்றார்.
காங்கிரஸ் கட்சி சட்ட மன்றகுழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி,“தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொதுவாக போராட்டங்கள் நடக்கும் இடத்தில் திடீரென்று காவல் துறையினர் தடியடி நடத்துகி றார்கள். இதுபோன்ற சம்பவம் இனி வேறு எங்கும் நடக்கக் கூடாது” என்றார். இந்த போராட்டத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய பிரச்சனை என்ன என்பது அர சுக்கு நன்கு தெரியும். நீங்களும் மக்களிடம் வாக்குறுதி கொடுத்தீர்கள். அதில் ஏன் கால தாமதம். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்று வதில் எந்த அரசுக்கு என்ன தயக்கம்? இதனால் எந்த பாதிப் பும் வராது. மக்களிடம் நல்ல பெயர்தான் கிடைக்கும் என்றார்.
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வேதனைகளை பல முறை நாங்கள் தெரிவித்தி ருக்கிறோம். இதுகுறித்து முதல மைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களிடம் எங்கள் சமூதாய தலைவர்கள் முறை யிட்டுள்ளார்கள். திராவிட இயத்தின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த ஆட்சியில். இதுவரைக்கும் பேணி பாது காக்கப்பட்டு வந்து அந்த நல்லி ணக்கம் தொடரவேண்டும்” என்றார். “இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லீம் மக்களை மட்டும் பாதிக்கும் சட்டம் அல்ல. ஒட்டுமொத்தமாகவே நமது இறையாண்மையையே கேள்விக் குறியாக்கும் சட்ட மாக இருக்கிறது. என்பதால் எங்களது வேதனைகளை அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
“சமூக நீதி, சமூக நல்லி ணக்கத்தையும் சகோதரத்து வத்தையும் நமது முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சூழ்நிலையில், விரும்பதகாத சில சம்பவங்கள் உருவாக் கக்கூடிய நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க கூடாது என்பதில் மாற்றுக் கருத்துகிடையாது” என்று தமின்முன்அன்சாரி கூறினார். குடியுரிமை பாதுகாப்பு தொடர்பாக நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டி ருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் மக்கள் அமைதியான வழியில் நடத்தி வருகிறார்கள். சென்னை மாநகரத்தில் அனைத்து சமுதாய மக்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்” என்றும் அவர் கூறினார்.