tamilnadu

img

அறிவிப்புகள்

‘வண்டலூரில் உலாவிட உலகம்’

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களை மிக அருகில் காணும் வகையில், ‘விலங்குகள் உலாவிட உலகம்’ரூ. 11 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

தீத்தடுப்பு அதிரடிப்படை

சேலம், குரும்பப்பட்டியில் உள்ள சிறு வன உயிரினப் பூங்கா, ‘நடுத்தர வன உயிரினப் பூங்கா’வாக தரம் உயர்த்தப்படும். இயற்கை மற்றும் மனிதர்களால் வனங்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுத்து, வன விலங்குகள் வனத்தில் இருந்து வெளிவரா வண்ணம் பாதுகாக்கும் வகையில் ரூ. 23 கோடியே 26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பு வனக்காவல் பணியமைப்பு மற்றும் தீத்தடுப்பு அதிரடிப்படை உருவாக்கி தேவையான உபகரணங்கள் வழங்கப்படும்.

அழிவிலிருந்து தேவாங்கு இனம் பாதுகாப்பு

திண்டுக்கல் சிறுமலை காப்புக்காடு, அழிந்துவரும் தேவாங்கு இனத்தின் பிறப்பிடமாக உள்ளதால், தேவாங்கைப்  பாதுகாக்கவும், காட்டு மாடு, கடமான், சாம்பல் நிற கரடி, ஆசிய  புனுகுப் பூனை, காட்டுப் பூனை, ஆகியவற்றுடன், வங்கப் புலி,  புள்ளிமான், சதுப்பு நில முதலை, மயில், வெளிமான், நெருப்புக்  கோழி, இந்திய மலைப் பாம்பு, சாரைப் பாம்பு, நல்ல பாம்பு,  மலேசிய மலைப் பாம்பு, குள்ளநரி, வங்க நரி ஆகியவை கொண்டு வரப்பட்டு, அவ் விலங்குகளுக்கு இருப்பிடங்கள்,  மருத்துவ வசதிகள், உணவு வழங்கும் இடம், தீவனத் தோட்டம், பூங்கா மற்றும் பார்வையாளர் வசதி ஆகியவை கொண்ட  ‘சிறு வன உயிரின பூங்கா’ 40 ஹெக்டேர் பரப்பளவில் ரூ. 10  கோடிசெலவில் உருவாக்கப்படும்.

ஐந்தடுக்கு கம்பிவேலிகள்....

யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவதால், மனித  உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கும்  பொருட்டு, தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்க ளில் எஃகு கம்பிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தூண்களை நிறுவி, 5 அடுக்கு கம்பிவேலிகள் 60 கி.மீ. தூரத்திற்கு 21 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். சென்னை வேளச்சேரியில், புதிதாக கட்டப்பட்டு வரும்  வனத்துறை தலைமை அலுவலக கட்டிடங்களுக்கு உட்கட்ட மைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 22 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கித் தரப்படும்.

(பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பிலிருந்து)
 


 

;