tamilnadu

img

என்ஐஏ அதிகாரிகள் திருச்சி, தஞ்சாவூரில் விசாரணை

தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.தஞ்சாவூர் ஆட்டுமந்தை தெருவைச் சேர்ந்தவர் ஷேக்அலாவுதீன்(55). இவர் அப்பகுதியில் செருப்புக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்பல ஆண்டுகளுக்கு முன் சிமி என்கிற அமைப்பில்உறுப்பினராக இருந்துள்ளார். மேலும், தடை செய்யப்பட்ட அமைப்புகளான ஐஎஸ்ஐஎஸ், கிலாபத் ஆகிய அமைப்புகளுக்கு ஆதரவாகமுகநூலில் கருத்துகளை பதிவு செய்திருந்ததாகக் கூறி, கொச்சியைச் சேர்ந்த என்ஐஏ காவல்
துறை டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், ஷேக்அலாவுதீன் வீட்டிற்கு சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அவரது காலணி விற்பனையக கடையிலும் சோதனை நடத்தினர். இரண்டு மணி நேர சோதனைக்கு பிறகு அவரிடம் இருந்தஒரு லேப்டாப், மொபைல் போன் மற்றும் டைரி ஒன்றையும் கைப்பற்றினர். தொடர்ந்து கிழக்கு காவல் நிலையத்துக்கு  அழைத்து சென்ற என்ஐஏ அதிகாரிகள், சனிக்கிழமை மாலை வரை
தொடர்ந்து ஷேக் அலாவுதீனிடம் விசாரணை நடத்தினர்.

திருச்சி 
தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய விவகாரத்தில் திருச்சியில் வாலிபர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சனிக்கிழமையன்று சோதனை நடத்தினர்.திருச்சி எடமலைப்பட்டி புதூர் சீனிவாசநகர் விரிவாக்கப் பகுதியில் வசிப்பவர் சர்புதீன் (வயது30). டிப்ளமோ பட்டதாரியான இவர், அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றி வந்தார். இவர் தீவிரவாத அமைப்பான அல்-கொய்தா அமைப்பின் முகநூல் குழுவில் இணைந்து கருத்துக்களுக்குப் பதில் அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறி, கடந்த ஒரு மாத காலமாகத் தேசிய புலனாய்வு அமைப்பினர் சர்புதீன் முகநூல் கணக்கைக் கண்காணித்திருக்கின்றனர்.இந்நிலையில் சனிக்கிழமையன்று தேசிய புலனாய்வு முகமையின் கேரள டிஎஸ்பி ஜார்ஜ் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார்மற்றும் திருச்சி மாநகர போலீசார் துணையுடன் சர்புதீன் வீட்டில் காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியதில் சர்புதீன் உறவினரான ஜாபருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இவரது வீட்டிலும் சோதனையிட்டனர். பின்னர் வீட்டிலிருந்து செல்போன்,பென் ட்ரைவ் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியதுடன்,தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்த தாக இருவரையும் விசாரணைக்காக அழைத்துசென்றுள்ளனர். சர்புதீன் ஞாயிறன்று வெளிநாடுசெல்லவிருந்த நிலையில் இந்த சோதனைநடந்துள்ளது.

;