tamilnadu

img

இஸ்லாமிய அமைப்புகள் முதல்வரை சந்திக்க அமைச்சர் ஏற்பாடு

குடியுரிமை திருத்தச் சட்டம்:

புதுக்கோட்டை, பிப்.17- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சரை இஸ்லாமிய அமைப்புகள் சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் சி.விஜய பாஸ்கர் உறுதியளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட அனைத்து உலமாக்கள், ஜமாஅத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கரை நேரில் சந்தித்து ஞாயிற்றுக் கிழமை ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் தமிழக அரசு குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவற்றால் இஸ்லாமியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.  எனவே இவற்றிற்கு எதிராக பல மாநிலங்களில் கருத்துகளை பதிவு செய்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றியதுபோல, தமிழக சட்டமன்றத் திலும் தீர்மானம் நிறைவேற்ற முதல்-அமைச்சரை வலியுறுத்த வேண்டும் எனக்கூறியிருந்தனர். 

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், உங்களது கோரிக்கை களை தெரிவிக்க விரைவில் உங்களை முதல்-அமைச்சரை சந்திக்க அழைத்து செல்வதாக உறுதி அளித்தார்.
 

;