tamilnadu

img

கோட்டை முன்பு மார்ச் 9 சிபிஎம் போராட்டம்

சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக!

சென்னை,மார்ச் 4- குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.),  தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றை ஏற்க மாட்டோம் எனவும், தமிழகத்தில் என்.பி.ஆர்., அமல்படுத்தப்படாது எனவும் சட்டமன்றக் கூட்டத்தொடரில்  தீர்மானம் நிறை வேற்ற வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  மார்ச் 9 அன்று சென்னை கோட்டை முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் மார்ச் 3 புதனன்று சென்னையில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.  வரதராசன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., ஆகியவற்றை எதிர்த்து தொடர் இயக்கங்கள் இந்திய அளவிலும், தமிழகத்திலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சி.ஏ.ஏ. எனும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் மத்திய பாஜக அரசு குடியுரிமையில் மதத்தை புகுத்தி இந்திய மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்துகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து தேசிய மக்கள் பதிவேடு (என்.பி.ஆர்.) எனும் பெயரால் குடியுரிமையை நிரூபிக்க மக்களை  நிர்ப்பந்திக்கிறது. குடியுரிமையை நிரூபிக்க தாய், தந்தையர் மற்றும் மூதாதையர் பூர்வீகத்தையும், பிறப்புச் சான்றிதழையும் வற்புறுத்திக் கோருகிறது. இதன்படி குடியுரிமையை நிரூபிக்க இயலாதவர்களை சந்தேகத்திற்குரிய  குடிமக்களாக்கி நமது குடியுரிமையை பறிக்க முனைந்துள்ளது.

அனைத்து மதத்தவருக்கும் பாதிப்பு

இந்த கணக்கெடுப்பின் தொடர்ச்சியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) தயாரிக்கவும் திட்டமிடுகிறது. இதனால் தமிழகத்திலேயே கோடிக்கணக்கான மக்கள் தங்கள் குடியுரிமையை இழக்க நேரிடும். என்.பி.ஆர்., என்.ஆர்.சி. அமலாக்கம் இஸ்லாமி யர்கள் மட்டுமல்ல, இந்துக்கள், கிறிஸ்தவர் கள் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் சார்ந்த ஏழை, எளிய மக்களையும் பாதிக்கும். இந்திய  மண்ணில் பிறந்தவர்களை இந்திய நாட்டிலேயே - தமிழகத்திலேயே  குடியுரிமை யற்றவர்களாக்கி அகதிகளாக்கும் நடவடிக் கையை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. 

கிஞ்சித்தும் கவலை கொள்ளாத அதிமுக அரசு

இந்த பேராபத்தை உணர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு தொடங்கி 13-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் சி.ஏ.ஏ.,  என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யை நிராகரிக்க முடிவு செய்துள்ளன. பாஜக அணியில் உள்ள சில மாநில அரசுகள் கூட என்.பி.ஆர்-ஐ நிராகரித்துள்ளன. ஆனால் தமிழகத்தை ஆளும் அஇஅதிமுக அரசு இதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு துணை நிற்கிறது. இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என போதனையும் செய்கிறது.

தமிழக அரசின் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு ஆதரவான நிலைபாட்டை கண்டித்தும், குடியுரிமையை பறிக்கும் சட்டத் திருத்தத்தையும், கணக்கெடுப்பையும், பதி வேட்டையும் எதிர்த்துப் போராடும் மக்களின் உணர்வை கருத்தில் கொண்டும் மார்ச் 9 தொடங்கி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.ஐ ஏற்க மாட்டோம் எனவும், தமி ழகத்தில் என்.பி.ஆர்., அமல்படுத்தப்படாது எனவும் தீர்மானம் நிறைவேற்ற வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2020 மார்ச் 9 அன்று காலை 10 மணி யளவில் கோட்டை முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில செயற் குழு தீர்மானித்துள்ளது. இவ்வியக்கத்திற்கு, சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராகவும் - அரசியல மைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, மக்கள்  ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை பேணிபாது காக்க குரல்கொடுக்கும் அனைத்துப்பகுதி மக்களும் கலந்து கொண்டு பேராதரவு தர வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.