tamilnadu

img

மனிதனின் பகுத்தறிவு எப்போதும் இயற்கைப் பேரிடரை வென்றே தீரும்: கி.வீரமணி

சென்னை, ஏப். 9- இனிமேலாவது  பழைய பத்தாம் பசலித்தன மூடநம்பிக்  கைகளுக்கு புதுமெருகேற்றா மல், அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி, மனித குலத்தை  அதன் அழிவிலிருந்து காப்பாற்ற  பாடம் கற்றுக் கொள்வோம் என்று  திராவிடர் கழகத் தலைவர்  கி. வீரமணி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்  டிருக்கும் அறிக்கை வருமாறு:

மனிதனின் பகுத்தறிவு எப்போ தும் இயற்கைப் பேரிடரை வென்றே தீரும் என்பது அறிவி யல் உண்மை. இதற்கு முன்பும் எத்தனையோ கொள்ளை நோய்கள் வந்து கொத்துக் கொத் தாக மக்கள் மடிந்த காலத்தில், பிளேக், காலரா, அம்மை போன்ற (அக்காலத் தொற்று) நோய்கள் வந்தும் கூட, அறிவியலும், அது தொடுத்த போரும் வெற்றியே கண்டிருக்கிறது. எனவே,  அஞ்சிடாமல், எதிர்கொள்ளும் முறை யோடு எதிர்கொள்ளத் துணிவோம்! உலகளாவிய இந்தத் தொற்று, வல் லரசுகள் என்று மார்தட்டிய நாடுகளின் தன்முனைப் பைத் தகர்த்துள்ளது. ராணுவத்தை பெருக்கி, வராத போருக்கான கருவிகளைப் புதிது புதிதாய்க் கண்டுபிடித்து, பல லட்சம் கோடி  ரூபாய்களை செலவழிக்கும் அரசுகளே, மக்கள் நல்வாழ்வுக் ்கான மருத்துவமனைகளில் தேவைப்படும் மருந்து, அதன் அறி வியல் ஆய்வு மூலம் புதிதாகக் கண்டு பிடித்து மனிதகுலம் மகிழ்ச்சியுடன் வாழ்வதற் கான ஏற்பாடுகளை செய்தீர்களா?

முதலில் மக்களுக்குத் தேவை - கல்வி அறிவும், மக்க ளின் நல்வாழ்வுக்குரிய பாது காப்பும்தான். அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டு மல்ல, நம் நாடு போன்ற நடுத்தர, ஏழை,  எளிய மக்கள் வாழும் நாடுகள் எவையானாலும், மருத்துவ வசதி  என்பது அடிப் படை உரிமை -  கட்டாயம். மேல் நிலையில் உள்ள வர்களுக்கும் சரி, சாதாரண மக்க ளுக்கும் சரி, நோயிலிருந்து விடு படுதல் என்பதில் பேதத்திற்கு இடமில்லாத சிகிச்சை முறைகள் உலகம் முழுவதும் கிடைப்பதை முன்னுரிமை யாக்கித் திட்ட மிட்டு செயலாற்றியிருந்தால், 80  ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் இழப்பு என்பது, போர்க் களத்தில் கூட ஒரே நேரத்தில்  காண முடியாத, கேட்க முடியாத  செய்தியாக உள்ளது.

அறிவியலை நோக்கி செல்லட்டும்!

அடுத்த படிப்பினை - அறிவி யலை நோக்கி உலகம் விரைந்து  செல்லட்டும். அறிவியலை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கே செலவழிக்க உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் நின்று,  ஒத்த குரலில் முழங்கி உறுதி யேற்கட்டும்! நோய்கள் மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்காதபோது -  மரணம் ஒரு சமரசம் உலாவும் இட மாகவே இருக்கும்போது, அவர்க ளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏன்  ஏழை, பணக்காரன்; இந்த நாட்ட வன், அந்த நாட்டவன்; இந்த மதத்த வன், அந்த மதத்தவன் என்ற  பார்வைக் கோளாறும், அணுகு முறைப் பிழையும் ஏற்பட வேண்டும்?

இனிமேலாவது நோய்க்கு எதிரான சிகிச்சைக் கருவிகளுக் கும், மருத்துவம் - அறிவியல் ஆய்வுகளுக்கும் முன் னுரிமை தந்து - பழைய பத்தாம் பசலித்தன மூடநம்பிக்கைகளுக்கு புது மெருகேற்றாமல், அறிவை விரிவு  செய்து அகண்ட மாக்கி, மனித குலத்தை அதன் அழிவிலிருந்து காப்பாற்றிட பாடம் கற்றுக் கொள்வோம். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.

;