சென்னை:
இந்தியாவின் தலைசிறந்த வரியியல் அறிஞரும், வருமான வரித்துறை முன்னாள் ஆணையருமான ராஜரத்தினம் (வயது 92) சென்னையில் காலமானார்.ஐ.ஆர்.எஸ். அதிகாரியான ராஜரத்தினம், 1928-ம் ஆண்டில் விருதுநகரில் பிறந் தார். பொருளாதாரம் மற்றும் வணிக சட்டம்பாடத்தில் முதுநிலை பட்டங்கள் பெற்றார். வருமான வரித்துறையில் வருமானவரி அதிகாரியாக, உதவி ஆணையராக, ஆணையராக, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினராக என பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தார்.இளம் ஆடிட்டர்கள், அதிகாரிகளுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். அவரது மறைவு அத்துறையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.மனிதநேயத்தோடு எவரிடமும் பழகும் பழுத்த நேர்மையாளர். அவரது மறைவு நமக்கும், நமது கொள்கைக் குடும்பத்தினருக்கும், அவர் குடும்பத்தினரைப் போலவே ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.