tamilnadu

img

சட்டமன்ற கூட்டத்தொடர் ஜன. 6இல் துவங்குகிறது

சென்னை,ஜன.4-  2020 புத்தாண்டில் தமிழக சட்ட மன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி துவங்குகிறது.  இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை யாற்றுகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை களை எதிர்க் கட்சியினர் எழுப்ப லாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து உரிமையாளர் மற்றும் வாடகை தாரர் உரிமைகள் சட்டத் திருத்தம் உள்ளிட்ட 6 சட்டத் திருத்தங்களுக்காக கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டங்கள் சட்ட மன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகி றது. கூட்டத்தொடர் ஜனவரி 10ஆம் தேதி வரை  நடைபெற வாய்ப்புள்ள தாகக் கூறப்படுகிறது.

;