சென்னை,அக்.22- மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறு தியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளி யிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- அரசு மருத்துவர்கள் இம் மாதம் 25 ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். பருவ மழை தொடங்கி தொடர்ந்து பெய்து கொண்டு வருகின்றது. டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பொது மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். பல உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மழைக் காலங்களில் நோய்களால் மக்கள் பாதிக்கப்படும் பொழுது அரசு மருத்துவ மனைகளையே மக்கள் பெரிதும் நம்பியுள்ள னர். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு இதனை விட்டால், அவர்களுக்கு வேறு வழி யில்லை. இத்தகைய நிலையில் மருத்து வர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலை யில், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக் கைகளை ஏற்று நிறைவேற்றுவதாக உறுதி யளித்ததை தொடர்ந்து மருத்துவர்கள் போராட் டத்தை தொடராமல் ஒத்தி வைத்தனர். அமைச்சர் அளித்த வாக்குறுதிப்படி கோரிக் கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால், மீண்டும் போராட்ட களத்திற்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பொது மக்கள் மற்றும் மருத்துவர்கள் நலன் கருதி காலம் தாழ்த்தாது அமைச்சர் அளித்தபடி வாக்குறுதிகளை நிறை வேற்ற அரசு முன் வரவேண்டும். அதற்கு மாறாக போராடும் மருத்து வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அச்சுறுத்துவது பயன் அளிக்காது என் ப தனை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.