tamilnadu

img

வன்முறையை தூண்டும் எச்.ராஜா, அர்ஜூன் சம்பத்தை கைது செய்க!

சென்னை, டிச. 6- தமிழ்நாடு அனைத்து சமய  நிறுவன நிலங்களில் குடி யிருப்போர் சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு  மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:- தமிழ்நாடு அனைத்து சமய  நிறுவன நிலங்களில் குடியிருப் போர், சாகுபடி செய்வோர் பாது காப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்புக்குழு கூட்டம் டிச.6  அன்று தாம்பரத்தில் நடைபெற் றது. கூட்டத்திற்கு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் கே.என்.ஜீவானந்தம் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில  பொதுச்செயலாளர் பெ.சண்மு கம் கலந்து கொண்டார். 

பல தலைமுறைகளாக கோவில் இடத்தில் குடியிருப்ப வர்களுக்கு பட்டா கேட்டு, அரசை வலியுறுத்தி பல ஆண்டு களாக போராடி வந்த நிலையில் தமிழக அரசு அரசாணை 318 ஐ  வெளியிட்டு அதில் நீண்ட கால மாக கோவில் இடத்தில் குடி யிருப்பவர்களை கணக்கிட்டு, ஆய்வு செய்தது. பிறகு, அற நிலையத்துறையின் ஒப்புதலைப் பெற்று அந்த இடங்களுக்கான உரிய தொகையை கொடுத்து விட்டு வரன்முறைப்படுத்தி ஏழை களுக்கு வழங்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணை 318-ஐ செயல்படுத்தக் கூடாது என  தொடரப்பட்ட வழக்கில் சென்னை  உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள  அரசாணை 318 ஐ செயல்படுத்தும்  வகையில் நீதிமன்றத்தில் உரிய முறையில் அரசின் நியாயமான, ஏழை எளிய மக்களின் நீண்டகால  கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தான் போட்ட அர சாணையை செயல்படுத்த உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடி யிருப்பவர்களுக்கு பல மடங்கு  வாடகையை உயர்த்தி, உயர்த் தப்பட்ட வாடகையை ஒரே தவ ணையில் கட்ட வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்புவது, கட்டத் தவறியவர்களை சட்டப்பிரிவு 78,79 யை பயன்படுத்தி ஆக்கிர மிப்பாளர்கள் எனக் கூறி இடத்தை விட்டு வெளியேற்றுவதற் கான நடவடிக்கையை உடன் கைவிட வேண்டும்.

பல தலைமுறைகளாக குடி யிருந்து வருபவர்களுக்கு வாரிசு  அடிப்படையில் பெயர் மாற்றம் செய்வதற்கு, எவ்வித நிபந் தனையின்றி பெயர் மாற்றம் செய்து தர வேண்டும். நிலங்க ளில் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு ஆர்.டி.ஆர். பதிவு செய்வ தற்கு கோயில், மடம், நிர்வா கங்கள் இடையூறு செய்வதை நிறுத்த வேண்டும் கோயில் இடத்தில் குடி யிருப்பவர்கள் 95 சதவீதத்திற்கும் மேல் ஏழை, எளிய இந்துக்க ளாக உள்ள நிலையில் எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் போன்ற வர்கள், அநாகரிகமான முறை யில், வன்முறையைத் தூண்டும்  வகையில் பேசுவதை வன்மை யாக கண்டிக்கிறோம். தமிழக அர சும், காவல்துறையும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;