tamilnadu

img

குரூப் 2ஏ முறைகேடு: மேலும் ஒருவர் கைது

சென்னை,பிப்.13- டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறை கேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசி ஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ முறை கேட்டில் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஜெயக்குமார், பாலசுந்தர் ராஜ், வெங்கட் ரமணன் தவிர 3 காவலர்கள், 23 அரசு ஊழி யர்கள் மற்றும் 9 தேர்வர்கள், 5 ஓட்டுனர்  கள் என 42 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். இந்தநிலையில் குரூப் 2ஏ தேர்வு முறை கேடு தொடர்பாக தற்போது மேலும் ஒரு வர் கைது செய்யப்பட்டுள்ளார். இதை யடுத்து, இதுவரை மொத்தம் 43 பேர் சிக்கி யுள்ளனர். இதற்கிடையே இடைத்தரகர் ஜெயக்குமாரின் 12 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அவரிடமிருந்து ரூபாய் 7  லட்சம் ரொக்கம் மற்றும் 2 கார்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன.