சென்னை, மார்ச் 28- பொதுமக்களின் நடமாட்டத்தை குறைப்பதற் காக காய்கறி மற்றும் மளிகை கடைகளை திறந்து வைப்ப தில் அரசு கட்டுப் பாடு விதித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு : அதில், தற்போது ஊரடங்கு உத்த ரவு வெற்றி பெற்றிருக்கும் நிலை யில் பால், காய்கறி, மளிகை, அரிசி, இறைச்சி மீன் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யும். நோய்த் தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் பலர் தெருக்க ளிலும் சாலைகளிலும் தேவையின்றி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி பழ அங்காடிகளுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் போர் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருட் களை இறக்கி விட வேண்டும். இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் முறையாக பாதுகாப்பு சுகாதார முறைகளை கடைபிடிக்க வேண்டும். இதைக் கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி அங்காடி மற்றும் பிற காய்கறி விற்பனை கடை கள் அத்தியாவசிய மளிகை பொருட் கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் இந்த கட்டுப்பாடு தேவை இன்றி மக்கள் வெளியில் நடமாடுவதை கட்டுப்ப டுத்துவதற்காக எடுக்கப்படுகிறது. அதேபோல் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் எனினும் அரசு வாகனங்கள் 108 அவசர ஊர்திகள் போன்ற ஊழியர்களுக்கான பிரத்தியோக பெட்ரோல் பங்கில் மட்டும் நாள் முழுவதும் தொடர்ந்து செயல்படும் மருந்தகங்கள், உண வகங்கள் (பார்சல் மட்டும்) நாள் முழு வதும் எப்போதும் போல் இயங்கும்.
சமைத்த சமையல் சப்ளை
வயது முதிர்ந்தோர், வீட்டில் சமைக்க முடியாதோர் சமைத்த உண வுப் பொருட்களை வீட்டிற்கு இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து வரு கின்றனர். இத்தகையோரின் நலன் கருதி சுகி, சுமொடோ, உபர் போன்ற தனியார் நிறுவனங்களின் மூலம் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை சிற்றுண்டியும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவு, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச் செல்ல சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. என்னிடம் இத்தகைய பணிகளில் ஈடுபடும் நபர்கள் அந்தந்த நிறுவ னங்கள் மூலம் காவல்துறையிடம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளவும் சம்பந்தப்பட்ட நிறுவ னங்களே அவர்களின் உடல்நிலையை தினந்தோறும் பரிசோதித்து பின்னர் பணியில் ஈடுபடுத்தவும் அறிவு றுத்தப்படுகிறார்கள். இந்த நடை முறை அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அமலுக்கு வந்துள்ளது.