tamilnadu

அனைவக்கும் உணவு, வேலை கொடு, வன்முறைக்கு முடிவு கட்டு நாளை 1000 மையங்களில் கவன ஈர்ப்பு இயக்கம்

ஜனநாயக மாதர் சங்கம் அறைகூவல்

சென்னை, மே 30 - ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள ‘அனைவருக்கும் உணவு, வேலை கொடு, வன்முறைக்கு முடிவு கட்டு’  என்று முழக்கத்தோடு ஜூன் 1 அன்று தமிழகத்தில் 1000  மையங்களில் கவன ஈர்ப்பு இயக்கம் நடைபெறுகி றது. இந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 என்ற கொடிய வைரஸ் பாதிப்பால் உலகமே உறைந்துள்ளது. இந்தியாவில் இதன் தாக்கம்  கடுமையாக உள்ளது. இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்  கிக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்  பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டா வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்  படுவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கி றது.

நேற்றையதினம் 938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயின் தாக்கத்தால் கடந்த இரண்டு மாத  காலத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.  இந்த ஊரடங்கால் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில்  மட்டும் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். எனவே,  ஏழை எளிய சாதாரண மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டுள்ளனர். பசியின் கொடுமையால் புலம் பெயரும் தொழிலாளர்களும், குழந்தைகளும் உயிரிழக்கும் அவலம் நடக்கிறது.  இந்த கொரோனா பேரிடர் காலத்தில் சாதாரண  ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவதிலும்,  புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாப்பதிலும் மத்திய, மாநில அரசுகள்  படுதோல்வி அடைந்துள்ளன. ரேஷன் கடைகளில் அரசு அறிவித்த இலவச பொருட்கள் கூட முழுமை யாக மக்களை சென்றடையவில்லை. வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஜூன், ஜூலை மாதங்க ளிலாவது முழுமையான வேலை வாய்ப்பு அனை வருக்கும் கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு மக்கள் காத்துக் கிடக்கின்றனர். 

இத்தகைய சூழலில் ‘அனைவருக்கும் உணவு, வேலை கொடு, தமிழகத்தில் அதிகரித்து வரும் வன்  முறைக்கு முடிவு கட்டு’ என்ற முழக்கத்தோடு ஜூன் 1  அன்று 10 மணி முதல் 10.30 மணி வரை தமிழகத்தில் 1000  மையங்களில் கவன ஈர்ப்பு இயக்கம் நடைபெறும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கூடுத லான நிதி ஒதுக்கீடு செய்து புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் உட்பட அனைவருக்கும் வேலை வாய்ப்பை  வழங்கிட வேண்டும், இத்திட்டத்தை நகர்ப்புறங்க ளுக்கும் விரிவு படுத்திட வேண்டும், அனைவருக்கும்,  அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன்  கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும், தமிழ கத்தில் அதிகரித்து வரும் வன்முறையை தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெறும் இந்த இயக்கத்தில் அனைத்து கிளைகளும் பங்கேற்க வேண்டும். அரசின் கவனத்தை ஈர்த்து கோரிக்கையை வெல்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.