tamilnadu

img

‘கனவு ஆசிரியர் விருது’ கல்வித்துறை உத்தரவு

சென்னை, செப்.11- கனவு ஆசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அக்டோ பர் 15 ஆம் தேதிக்குள் பரிந்து ரைக்க மாவட்ட முதன்மை கல்வி  அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கற்பித்தல் மற்றும் கல்வி இணை  செயல்பாடுகளில் சிறந்து விளங்கும்  அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட  உள்ளது. விருது பெறுபவருக்கு பாராட்டுச் சான்றிதழுடன் 10 ஆயிரம்  ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்படும். இந்த நிலையில் கல்வித்துறை யின் வழிகாட்டுதல்களை பின்பற்றி  முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட  ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக் கல்வி அதிகாரி, மூத்த  வட்டார கல்வி அதிகாரி, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமையாசிரியர் ஆகி யோரை கொண்ட மாவட்ட தேர்வுக்  குழுவானது பள்ளிகளில் ஆய்வு  மேற்கொண்டு சிறந்த ஆசிரி யர்களை தேர்வு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. மேலும் விவர அறிக்கையை புகைப்பட ஆதாரங்களுடன் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட  முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி  அனுபவம் உடைய 6 பேர் வீதம் தகுதியானவர்களை பரிந்துரைக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் தமிழக அரசின் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரி யர்களை பரிசீலிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;