tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

அமெரிக்க அரசு :- 15 நாட்டு தூதுவர்கள் காஷ்மீரில் ஆய்வு செய்தது முக்கியமான நடவடிக்கை.
ச.சா - அவங்கள்லாம் நீங்க அனுப்புன ஆளுங்களோ..??
 

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் :- விபத்துக்களைக் குறைத்ததால் தமிழகத்துக்கு விருது.
ச.சா - மக்கள் விரோத சட்டங்களுக்கு ஏன்னு கேக்காம ஆதரவு குடுக்குறதுக்கு சன்மானமோ..?
 

ஜவகர்லால் நேரு பல்கலை. பதிவாளர் மகாபத்ரா :-  நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டே மாணவர்கள் போராட வேண்டும்.
ச.சா - அவங்க அப்படித்தான் இருக்காங்க... குண்டர்கள இறக்கிவிட்டது யாருன்னு சொல்லுங்க.!!
 

துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு :-  மாற்று மதங்களையும் மதிப்பதுதான் இந்தியர்களின் மாண்பு.

ச.சா - அதுதான் ஆளுங்கட்சிக்கு ஆபத்தா இருக்கு..!!

;