tamilnadu

img

வளர்ந்து வரும் நடனக் கலைஞரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்

சென்னை, மார்ச் 2- ஃ பையோமையோசைட்டிஸ் என்னும் நோயின் (Pyomyositis) தீவிர பாதிப்புக்கு உள்ளாகி உயி ருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பத்து வயது இளம்  நடனக் கலைஞரை சென்னையை  சேர்ந்த மருத்துவர்கள் காப்  பாற்றி உள்ளனர். அசாம் மாநிலம் குவ ஹாத்தியைச் சேர்ந்த பெற்றோர் தனது மகள் நடனக்கலைஞராக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தனர். அவர்களது 10வயது மகளுக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டதால் முழங்கா லுக்கு மேலே பிளாஸ்டர் கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக் கப்பட்டு வந்த நிலையில் ஏழு நாள் கழித்து அதிக காய்ச்சலுடன் அவர் சென்னையில் உள்ள  காவேரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அப்போது  அவருக்கு வலது காலில் வீக்க மும் தாங்க முடியாத வலியும் இருந்தது.

டீப் வெயின் த்ரோம்பா சிஸ் என்னும் நரம்பு பாதிப்பு  இருப்பதாக அறிகுறிகள் தெரிய வந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டாவது நாளில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு  சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்ப டவே அவரை குழந்தை களுக்கான தீவிர சிகிச்சை பிரி விற்கு மாற்றினார்கள். சிறுமியின்  வலது காலில் தோலின் நிறம் மாறி அது உயிருக்கும் காலுக்கும் ஆபத்தான சூழ்நிலையை உரு வாக்கியது.மேலும் உடல் நடுக்கம், சுவாசிக்க இயலாமை மோசமான சிறுநீரக பாதிப்பு மற்றும் சீழ்பிடிப்பு என சிறுமிக்கு பல உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே சிறுமிக்கு உயிர் காக்கும் கருவிகள் மற்றும் அதி நவீன ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவர்கள் பரிசோதனை யில் சிறுமி தீவிர பையோமை யோசைட்டிஸ் பாதிப்பிற்குள் ளாகி இருப்பது தெரியவந்தது. அதனால் முழங்காலை சுற்றி யுள்ள திசுக்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில் எலும்பை சுற்றியிருந்த தசைகளின் திசுக்களில் நெக் ரோஸ் எனப்படும் செல் சிதைவு  ஏற்பட்டிருந்தது. காலின் மேல் மட்டத்தில் உள்ள திசுக்கள் எது வும் பாதிக்கப்படாமல் உள்ளே மட்டும் பாதிக்கப்பட்டிருந்தது மிகவும் அரிதான ஒன்றாகும். பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர்கள், குழந்தை சிகிச்சை  நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபு ணர்கள் மற்றும் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் ஒருங்கி ணைந்து ஒரு குழுவாக அச்சிறு மிக்கு சிகிச்சை அளித்தனர். சிதை வடைந்த திசுக்களை நீக்கி உயி ரையும் காலையும் காப்பாற்றும் பொருட்டு ஸ்கின் கிராஃப்ட்டிங் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று குழந்தை மருத்துவ நிபு ணர் டாக்டர் லக்ஷ்மி பிரஷாந்த் கூறினார். மூத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள்   நாராயண மூர்த்தி,  சதீஷ் மணிவேல், அருள்  மொழி மங்கை உள்ளிட்ட மருத்துவ நிபுணர் குழுவினர் தீவிரமாக பணியாற்றி அந்த சிறுமியை காப்பாற்றியதோடு நடன கலைஞராக வேண்டும் என்ற கனவும் நிறைவேற உதவி யுள்ளனர்.

;