சென்னை: கொரோனா காரணமாக தமிழகத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க ஹாப்பி ஹைபாக்ஸ்மியா ( Happy Hypoxemia அல்லது Silent Hypoxemia) முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு மரணத்தை கட்டுப்படுத்தி வந்தால் பலி எண்ணிக்கை உயர இது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
எப்படி மரணம்
தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிராக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும் இறப்பை கட்டுப்படுத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலும் கொரோனா காரணமாக பலியாகும் நபர்கள் என்று பார்த்தால் அவர்களுக்கு ஏற்கனவே உடல் ரீதியாக வேறு நோய்கள் இருந்தது. அதாவது சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் குறைபாடுகள் இருந்துள்ளது.
அதிக மரணம்
இப்படி உடல் குறைபாடுகள் இருக்கும் நபர்கள்தான் கொரோனா காரணமாக தமிழகத்தில் அதிகம் பலியாகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மக்கள் கொரோனா காரணமாக பலியாக இன்னொரு முக்கிய காரணமாக ஹாப்பி ஹைபாக்ஸ்மியா ( Happy Hypoxemia அல்லது Silent Hypoxemia) பார்க்கப்படுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்து, இதயத்திற்கு செல்லும் ஆக்சிஜன் குறைவதுதான் ஹாப்பி ஹைபாக்ஸ்மியா ஆகும்
என்ன கரணம்
பொதுவாக கொரோனா என்பது உடலில் இருக்கும் இதயத்தை தாக்கும் வைரஸ் ஆகும். இதயத்தை செயல் இழக்க செய்து இந்த வைரஸ் மனிதர்களை கொள்கிறது.பல்வேறு வகையில் இந்த வைரஸ் இதயத்தையும், உடல் உறுப்புகளையும் செயல் இழக்க செய்கிறது. அதில் ஒருவகைதான் ஹாப்பி ஹைபாக்ஸ்மியா என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் உடலில் இதயத்திற்கு செல்லும் ஆக்சிஜன் அளவு வேகமாக குறையும்.
ஆக்சிஜன் அளவு குறைவும்
அதேபோல் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவும் குறையும். இதை ஹாப்பி ஹைபாக்ஸ்மியா என்று அழைக்க காரணம், இப்படி உடலில் ஆக்சிஜன் அளவு குறையும் போது, அதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதாவது உடலில், இதயத்திற்கு செல்லும் ஆக்சிஜன் வேகமாக குறையும். ஆனால், நமக்கு மூச்சு அடைப்பு ஏற்படாது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாது. உடல் இயல்பாக இருக்கும்.
அறிகுறி இல்லை
ஆனால் திடீர் என்று இதயம் ஆக்சிஜன் இன்றி செயல் இழந்து மரணம் ஏற்படும். சத்தமே இல்லாமல் இப்படி ஆக்சிஜன் குறைவதுதான் ஹாப்பி ஹைபாக்ஸ்மியா ( Happy Hypoxemia அல்லது Silent Hypoxemia) என்று பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இடையே இந்த ஹாப்பி ஹைபாக்ஸ்மியா அதிகம் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். இதனால் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவு 90%க்கும் கீழ் குறையும்.