tamilnadu

டி.எல். எனும் ஈரெழுத்துச் சொல்

அரசு ஊழியம் என்னவோ
கால்நடைத் துறையில் தான்
முரசு கொட்டியதென்னவோ
அனைத்து ஊழியர்களுக்காகவும்தான்

ஊன்றிய விதை
தோன்றும் விருட்சம்
என்றும் நிலைக்கும்
குன்றாப் புகழ் மலைக்கும்

அரசுப் பணிக்கு முற்றுப்புள்ளி
சுரண்டலுக்கு வைக்கவே கொள்ளி
பொதுவுடைமை இயக்கத்தை     அள்ளியது
புதுப்பாதை மின்னியது

வழிகாட்டுதலில்
விழிநிகர் பொறுப்பு
கழிபெரும் அக்கறை இருப்பு
இதுவே டி.எல். சிறப்பு

படைப்புகள் எனின்
மேலெழுந்த வாரியாக அல்ல
ஆழ அகல உழும் அழகு
தோழர் டி.எல்.லிடம் பழகு

வயது மூப்பிலும் இயக்கம்
சிறுபான்மையினர் நலனுக்கான     முழக்கம்

மாற்றம் ஒன்றே மாறாதது
மாற்றுத் திறனாளிகளுக்கும்கூட
போற்றும் வழிகாட்டலைப் பற்றி
மாற்றுத் திறனாளிகளுக்கு வெற்றி

உங்கள் கனவான
எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கும்
மண்ணின் சொர்க்கவாசல் திறக்கும்
நங்கூரமிடும் நம்பிக்கையுடன்...

====பெரணமல்லூர் சேகரன்===