புதுக்கோட்டை, ஆக.25- ஊரடங்கு காலத்தில் வேலையின்றி வறுமையில் வாடும் ஏழைகளுக்கு நிவா ரணமாக ரூ.7,500 வழங்கக்கோரி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புது க்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு தழுவிய இயக்கமாக நடை பெற்று வரும் ‘தேசம் காப்போம்’ நிக ழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பா ட்டங்கள் நடைபெற்றது. கறம்பக்குடி வடக்கு ஒன்றியம் குள ந்திரான்பட்டில் வி.மணிவேல், மண மடையில் ஆர்.சந்திரசேகரன், பந்து வக்கோட்டையில் எம்.மாதவன், தீத்தா ன்விடுதியில் எஸ்.முருகதாஸ், கறம்ப க்குடியில் பி.வீரமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செய ற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் சிறப்புரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் துரை.அரிபாஸ்கர், எம்.பழனியப்பன் உள்ளி ட்டோர் பேசினர். கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்ச ங்குறிச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.மணி தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் க.சித்திரைவேல், வெ.இளைய ராஜா ஆகியோர் பேசினர்.