tamilnadu

img

தரைக்கடை வியாபாரிகள் மீது நடத்திய தாக்குதலை தட்டிக்கேட்ட சிபிஎம் தலைவர்கள் சிறையில் அடைப்பு

கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை, ஜுன் 20- மயிலாடுதுறை தரைக்கடை வியா பாரிகள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலைத் தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைவர்கள் மீது பொய்வழக்கு புனைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வன்மையாகக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வண்டிக்கார தெருவில் கடந்த பல ஆண்டுகளாக கடையில் பூ, பழம், காய்களை வைத்து சாலையின் ஓரமாக இருபுறமும் அமர்ந்து வியாபாரம் செய்து வரு கின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் ஆவார்கள். இவர்கள் அனைவரையும் உள்ளடக்கி வெண்டிங் கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருக்கும் அடையாள அட்டையும் நக ராட்சியால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மாவட்ட துணை ஆட்சிய ரால் சாலையின் இருபுறமும் கயிறு அடித்து இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், 18.06.2019 அன்று பகல்  சுமார் 12 மணியளவில் நகராட்சி ஆணை யர் மற்றும் மயிலாடுதுறை காவல்துறை யினர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லா மல்  ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் லாரி களை கொண்டு வந்து கடைகளையும், பொருட்களையும் சேதப்படுத்தியதுடன், தரைக்கடை வியாபாரிகளையும், கண்  மூடித்தனமாக தாக்கியுள்ளனர். பழக் கூடைகளை சாலையில் தூக்கி வீசியுள்ள னர். பல பெண்களும் தாக்கப்பட்டுள்ளனர். முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல்  ஏன் இப்படி அராஜக செயல்களில் ஈடு படுகிறீர்கள் என்று தட்டிக்கேட்டதற்காக, தரக்குறைவான வார்த்தைகளால் பேசி யதுடன்,  மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி. கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஸ்டாலின், மயிலாடுதுறை வட்டச் செயலாளர் சி. மேகநாதன், தரைக்கடை வியாபாரிகள் சங்க செயலாளர் டி. துரைக்கண்ணு, ஆட்டோ-கார்-வேன் ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் டி.  ரவீந்திரன், தரைக்கடை சங்க உறுப்பினர் சிவராமன் ஆகியோரை கடுமையாகத் தாக்கி, கைது செய்து, அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவு களின் கீழ் பொய்வழக்கு புனைந்து சிறையில் அடைத்துள்ளனர். காவல் துறையின் இந்த ஜனநாயக விரோத நட வடிக்கைக்கும், தரைக்கடை வியா பாரிகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் நகராட்சி ஆணையர் மற்றும் அவருக்கு துணைபோகும் மயிலாடுதுறை காவல்துறையினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மை யாகக் கண்டிக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டாஸ்மாக் கடையை மூடுவதற்காக போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 23 பேர் மீது இதே மயிலாடுதுறை காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்து அனைவரை யும் 32 நாட்கள் சிறையில் அடைத்தது. தொடர்ந்து மயிலாடுதுறை காவல்துறை யினர் சிபிஐ (எம்) இயக்கத்தை பழி வாங்கும் நோக்கத்தின் ஒரு பகுதி யாகவே மீண்டும் இப்போது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்.  காவல்துறையினரின் அராஜகத்தை தட்டிக் கேட்கும் பொதுமக்கள் மற்றும் சிபிஐ(எம்) உள்ளிட்ட அரசியல் இயக்கங் களையும் மயிலாடுதுறை காவல்துறை ஆய்வாளர் டில்லிபாபு என்பவர் தரக்குறைவாக பேசுவது, மிரட்டுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது போன்ற  ஜனநாயக விரோத நடவடிக்கை யில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பா ளரும் உடனடியாக தலையிட்டு, பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளவர்களை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்ப பெற வேண்டுமெனவும், பாதிக்கப் பட்டுள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் அவர்கள் தொடர்ந்து அதே இடத்தில் வியாபாரம் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பொதுமக்களையும், வியாபாரிகளையும் தாக்கிய மயிலாடுதுறை காவல்துறை ஆய்வாளர் டில்லிபாபு உள்ளிட்ட காவ லர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.