tamilnadu

img

சிபிஎம் தலைவர் செல்லதுரைக்கு கொலை மிரட்டல்

பெரம்பலூர் எஸ்.பி.யிடம் சிபிஎம் புகார் 

பெரம்பலூர், பிப்.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, தற்போது தமிழக மக்கள் ஒற்றுமை மேடை பெரம்பலூர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சனியன்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனிடம் ஒரு புகார் மனு அளித்தார்.  அம்மனுவில், 31.1.2020 அன்று இரவு 11 மணியளவில் தனக்கு தொலைபேசி யில் பெயர் கூற விரும்பாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டு தேனி மாவட்டத்தில் இருந்து பேசுவதாகவும், நீ என்ன பெரிய ஆளாடா என்று கூறி எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு கொச்சை வார்த்தைகளால் வெறித்தனமாக பேசி யதால் நான் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டேன் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு அனைத்து மக்களையும் பாதிக்கின்ற காரணத்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து மதத்தினருடன் இணைந்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம்.

போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருவதை பொறுத்துக் கொள்ள முடி யாத இந்து மதவெறி பிடித்த நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமி ழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனு வில் தெரிவித்துள்ளார்.  இந்திய கம்யூனிஸ்ட்கட்சி மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம், பகுஜன் கட்சி ப.காமராசு, மனிதநேய மக்கள் கட்சி எம்.எஸ்.எம்.சுல்தான்மொய்தீன், மீராமொய்தீன், தமுமுக மாவட்ட செயலாளர் குதரத்துல்லா, தமுமுக இளைஞரணி முகமது இலியாஸ், திராவிடர் கழகம் தங்கராசு, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அகஸ்டின், பி.ரமேஷ் மற்றும் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் ஆகியோர் உடன் சென்றனர்.

;