tamilnadu

img

குமரி முதல் திருவள்ளூர் வரை சிபிஎம் வேட்பாளர்கள் வெற்றி

திண்டுக்கல் மாவட்டம்


திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் 2-ஆவது வார்டு ஒன்றிய உறுப்பினர்  பொறுப்பிற்கு போட்டியிட்ட (செட்டிநாயக்கன்பட்டி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வநாயகம் 2,033 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 1,616 வாக்குகள் பெற்றார்.  ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட  7-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பொறுப்பிற்கு போட்டியிட்ட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அமுதவள்ளி வெற்றி பெற்றார்.  அமுதவள்ளி 2,023 வாக்குகள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் லட்சுமி 1,037 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.  திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் 13-ஆவது வார்டு பள்ளபட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் பொறுப்பிற்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெ.ஜீவாநந்தினி 2100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சகாயமேரி  தோல்வியடைந்தார்.  ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 14-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பொறுப்பிற்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்  பிரகாஷ்  வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் ராஜ்குமார்  தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளர் கணேசன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். ஒட்டன்சத்திரம் ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சித் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் இந்திரா வெற்றி பெற்றுள்ளார்.   திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் அடியனூத்து ஊராட்சித் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.ஜீவானந்தம் வெற்றி பெற்றுள்ளார். 

தேனி மாவட்டம் 

உத்தமபாளையம் ஒன்றியம் லட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி உறுப்பினர் வி.செல்லப்பா வெற்றிபெற்றார். மும்முனைப் போட்டியில் வி.செல்லப்பா 880 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மதுரை

மதுரை திருமங்கலம் ஒன்றியம் கப்பலூர் ஊராட்சித் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.கண்ணன் 650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட குன்னத்துப்பட்டி கட்சிக்கிளை உறுப்பினர் அர்ச்சுணன் மனைவி செல்வி சுமார் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் அஞ்சு கோட்டை ஊராட்சித் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் பூபாலன் 679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தமக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளரை விட 161 வாக்குகள் அதிகம் பெற்றார்.

சிவகங்கை

சிவகங்கை திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் முக்குடி ஊராட்சித்  தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் முத்தையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் 

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்  அச்சம்தவிர்த்தான் ஊராட்சி மன்றத் தலைவராக கிருஷ்ணவேணி தேர்வு செய்யப்பட்டார். இவர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவருமான கனகராஜின்  துணைவியார் ஆவார்.

தூத்துக்குடி

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 12-ல் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சுப்புலட்சுமி புவிராஜ் 1219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் சான்றிதழ் வழங்கினார். சிபிஎம் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் புவிராஜ் ஆகியோர் உடனிருந்தனர். ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 19-ல் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சித்ராதேவி சண்முகராஜ் 1164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் சான்றிதழ் வழங்கினார். சிபிஎம் ஒட்டப்பிடாரம் தேர்தல் பொறுப்பாளரும் தூத்துக்குடி மாநகர் செயலாளர் தா.ராஜா, 8-வது வார்டு மாவட்ட கவுன்சில் வேட்பாளர் கே.பி.ஆறுமுகம், சிபிஎம் ஒட்டப்பிடாரம் ஒன்றியச் செயலாளர் சண்முகராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தி.குமாரவேல், த.சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல அருணாச்சலபுரம் பகுதி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சிபிஎம் உறுப்பினர் சண்முகராஜ், சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் சிபிஎம் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் புவிராஜ், தாலுகா குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், ஆண்டி, அலுவலக செயலாளர் சங்கரசுப்பு, சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் வையனப்பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.  

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரம்:
 

மேல்புறம் ஒன்றியம்

மேல்புறம் ஒன்றியம் 5ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் ரமணி வெற்றி பெற்றார். 6 ஆவது வார்டில் பேபி, 7 ஆவது வார்டில் ஷீபாராணி ஆகியோர் வெற்றி பெற்றனர். முஞ்சிறை ஒன்றியம் முதலாவது வார்டில் என்.பத்மகுமாரி, 2 ஆவது வார்டில் ற்றி.டி.ரெஜி ஆகியோர் வெற்றி பெற்றனர். 

ஊராட்சி தலைவர்கள்

மேல்புறம் ஒன்றியம் மாங்கோடு ஊராட்சிமன்ற தலைவராக டி.எஸ்.ராஜன், மருதங்கோடு ஊராட்சிமன்ற தலைவராக ராஜேந்திரன், மலையடி ஊராட்சி தலைவராக ஹேமரின், முழுக்கோடு ஊராட்சி தலைவராக மரிய விலாசினி, கிள்ளியூர் ஒன்றியம் இனையம் புத்தன்துறை ஊராட்சி தலைவராக மேரி மஜிலா ஆகியோர் வெற்றி பெற்றனர்.  முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் அடைக்காகுழி ஊராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் 10 வார்டுகளை சிபிஎம் சார்பு வேட்பாளர்கள் கைப்பற்றினர். இதுபோல் மாங்கோடு ஊராட்சியில் 3 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சிபிஎம் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் ராயர்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கட்சியின் எஸ்.கே.குணசுந்தரி லட்சுமணன் தேர்வு செய்யப்பட்டார்.  பதிவான 600 வாக்குகளில் 315 வாக்குகளை பெற்றார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஏழுமலையின் மூத்த சகோதரியான இவர் 10 ஆண்டுகளுக்கு மேல் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ளார். பரங்கிப் பேட்டை ஒன்றியம் பி.முட்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரான ஜெயசீலன் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். குமராட்சி ஒன்றியம் சி.தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த ஜி.மாரியப்பன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைக் காட்டிலும் 1500 வாக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். புவனகிரி ஒன்றியம் சி.முட்லூர் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த வேதநாயகி பஞ்சநாதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியின்றி சிபிஎம் வேட்பாளர்கள் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 6 பேர் மலைவாழ் மக்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள்.  இவர்களில் கலசபாக்கம் ஒன்றியம் கெங்கல மகாதேவி ஊராட்சி மன்றத்திற்கு வேடியப்பன் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தெள்ளார் ஒன்றியம்  மாவலவாடி ஊராட்சிமன்றத்தில் மலை சங்கம் சார்பில் போட்டியிட்ட ஏழுமலை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செய்யார் ஒன்றியம் சித்தாமூரில் சி.அனிதா, வந்தவாசி ஒன்றியம் புலிவாய் கிராமத்தில் கருப்பாயி, காவணியாத்தூரில் வி.ஏழுமலை ஆகியோர் ஊராட்சி மன்றத் தலைவர்களாக வெற்றி மாலை சூடினார்கள். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம், காயம்பட்டு சென்னசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 7 கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பரிமளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றார்.

திருவள்ளூர் 

திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள மாளந்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த விஜியன் வெற்றி பெற்றார்.  சோழவரம் ஒன்றியத்தில் ஞாயிறு ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜி.வி.எல்லையன் தலைவராக வெற்றி பெற்றார். திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் 16 வது வார்டில் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட்ட கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி. ரவி அதிமுக வேட்பாளரை 515 வாக்குகள் அதிகம் பெற்று பொதுத் தொகுதியில் ஒரு தலித் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். கும்மிண்டிப்பூண்டி ஒன்றியத்தில் திருபுழல்பேட்டை வார்டு எண் 18-ல் மார்க்சிஸ் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினரான எம். ரவிக்குமார் வெற்றி வாகை சூடினார். இவர், கடந்த முறை ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிட தக்கதாகும்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் காட்டேரி (தனி) தொகுதியான 20 வது வார்டில் போட்டியிட்ட தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஏ. கோவிந்தசாமி 1055 வாக்குகள் பெற்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். இவர், தீக்கதிர் தருமபுரி மாவட்ட செய்தியாளர் ஜி.லெனின் தந்தையுமாவார்.













 

;