கொரோனா பாதிப்பு
இந்தியா - 873 : தமிழகம் - 40 பலியானோர் எண்ணிக்கை 19 ஆனது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 பேராக அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 பேராக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் துபாயில் இருந்து தமிழகம் வந்த 24 வயது வாலிபர் திருச்சி கே.எ.பி.விஸ்வநாதம் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையிலும், லண்ட னில் இருந்து வந்த 24 வயது வாலிபர், அவருடன் இருந்த 65 வயது பெண் ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 பேரில் இருந்து 40 பேராக அதிகரித்துள்ளது. மதுரை, ஈரோடு, சென்னை மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.