திருநெல்வேலி அரசு பொதுமருத்துவமனையில் புதியதாக கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்ப டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். “திருநெல்வேலி மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் குடி நீர் மற்றும் பொது சுகாதார வசதியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?” திமுக உறுப்பினர் மொய்தீன்கான் கேள்வி எழுப்பி னார். இதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், “சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர மருத்துவமனை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்ப டும். தாமிரபரணி ஆற்றுப்படுகையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு 6.30 கோடி ரூபாய் செலவில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் சீரான குடிநீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது” என்றார். தென் தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய மருத்துவ மனையான திருநெல்வேலி அரசு பொதுமருத்துவமனையில், புதிய தாக கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் விரைவில் மையம் அமைக்கப்ப டும் என்றும் கூறினார்.