tamilnadu

img

கொரோனா அறிகுறி: திருவண்ணாமலையில் ஒருவர் அனுமதி

சென்னை,ஜன.31- சீனாவிலிருந்து அண்மை யில் தமிழகம் திரும்பிய ஒரு வர் திருவண்ணாமலையில், கொரோனா அறிகுறிகளுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்தமாதிரி சோத னைக்கு அனுப்பப்பட்டுள்ள தாக கூறப்படும் நிலையில்,  நோயாளி தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். திருவண்ணா மலையை சேர்ந்த 28 வயது  நபர் ஒருவர் சீனாவில் மென்  பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். வூகான் நகரில் இருந்து சுமார்  900 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள ஷாங்காய் நக ரில் பணியாற்றி வந்த அவர்,  கடந்த 17ஆம் தேதி, தனது மனைவியுடன் தமிழகம் திரும்பியுள்ளார்.

சீனாவில் இருந்து புறப்படும்போதும், தமிழ கம் வந்த பிறகு விமான  நிலையத்திலும் சோதிக்கப் பட்டபோது, அவருக்கு சளி,  இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதுமில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்க ளாக, சளி இருமல் இருந்த தால், அவர் திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானாகவே சென்று மருத்து வர்களை சந்தித்துள்ளார். அவர் சீனாவில் இருந்து திரும்பியவர் என்பதாலும், சளி, இருமல் போன்ற அறி குறிகள் இருந்ததாலும் அவரை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்  காணித்து வருகின்றனர். அவ ரின் ரத்தம் உள்ளிட்ட மாதிரி கள் மருத்துவ பரிசோத னைக்கு அனுப்பப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் தெரி விக்கின்றன. இதனிடையே, சீனாவில் இருந்து அவர் கடந்த 17ஆம் தேதி தமிழ கம் வந்தபோது, அவருடன் வேறு பிற பயணிகள் 20 பேர்  தமிழகம் வந்ததாகவும், அவர்கள் பல்வேறு ஊர்க ளைச் சேர்ந்தவர்கள் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

;