மதுரை, ஜூலை 10- தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரு மான செல்லூர் கே.ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். செல்லூர் கே.ராஜூவின் மனைவி ஜெயந்தி யும் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கொரோனா பாதிப்புக்குள்ளாகி, தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் ஆகி யோர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மின் துறை அமைச்சர் தங்கமணி, ஆகியோ ருக்கும் நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டூவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்க ப்பட்டுள்ள செல்லூர் கே.ராஜூவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து ள்ளார். அப்போது, செல்லூர் கே.ராஜூ விரைவில் நலம்பெற வேண்டும். எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனை வருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள் ளார்.