tamilnadu

img

வர்க்க ஒற்றுமைதான் உலகத்தொழிலாளர் வலிமை

உலகத் தொழிற்சங்க சம்மேளனத் தலைவர் முழக்கம்

சென்னை, ஜன.24- “உலகம் முழுவதுமே தொழி லாளர்கள் பல்வேறு சவால்களை எதிர் கொண்டிருக்கிறார்கள், உழைப்பாளி வர்க்க ஒற்றுமையும் வலிமையும் அந்தச் சவால்களை முறியடிக்கும் என்பது உறுதி,” என்று உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் (டபிள்யுஎப்டியு) தலைவர் ஸ்வாண்டில் மைக்கேல் மக்வாய்பா முழங்கினார். சென்னையில் வியாழனன்று (ஜன.23) தொடங்கிய சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள மக்வாய்பா தனது வாழ்த்துரையில், பல்வேறு நாடுகளிலும் தொழிற்சங்க இயக்கங்கள் அரசுகளின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளால் மட்டு மல்லாமல், பிற்போக்கான சமூக அமைப்புகளாலும் சவால் மிக்க நிலைமைகளை எதிர்கொண்டுள்ளன என்றார்.

“இந்தியாவிலும் அப்படிப் பட்ட சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிற தொழிலாளர் வர்க்கத் திற்கு உலகத் தொழிலாளர்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.  இந்தியத் தொழிலாளர்களின் போராட்ட அனுபவங்களைப் பெற்றுச் செல்வதற்காகவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். கடுமையான அரசியல் – பொருளாதார – சமூக நிலைமைகளில் உறுதியோடு போராடிக் கொண்டிருக்கிற இந்திய உழைப்பாளி வர்க்கத்திற்கு வாழ்த்துக் கூறவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்,” என்று கூறினார் அவர்.

எல்லைகளைக் கடந்த ஒருமைப் பாட்டை உலகில் தொழிலாளி வர்க்கத்திடம் மட்டுமே காண முடியும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்பட உலகின் பல நாடுகளி லும் அரசுகள் கொண்டுவந்த பொருளா தாரத் தாக்குதல்கள், தொழிற் சங்கங்களுக்கு சவாலான சட்டங்கள் போன்றவற்றையும், சமுதாயத்தில் பிற்போக்கான நிகழ்வுப்போக்கு களையும் தொழிலாளி வர்க்க ஒருமைப் பாட்டால் மட்டுமே தடுத்து நிறுத்த முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட் டார். “அனைத்து நாடுகளிலும் மக்கள் நடத்துகிற நியாயமான போராட்டங்  களுக்கு ஆதரவாக நாம்தான் களமிறங்க முடியும். நாடுகள் வேறுபட்டாலும் உல கத் தொழிலாளர்களின் போராட்ட மொழி ஒன்றுதான்,” என்றார் மக்வாய்பா.

;