tamilnadu

img

“கடவுள் இல்லை” வாசகத்தை நீக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை,செப்.4- சென்னையைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பெரியாரின் சிலைகளுக்கு கீழ் உள்ள கல்வெட்டில் கட வுள் இல்லை, கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி போன்ற வாசகங்கள் பொறிக்கப் பட்டுள்ளதாகவும், அது போன்ற வாசகங்களை பெரி யார் எந்த காலத்திலும் சொல்லவில்லை என்பதால் அந்த வாசகங்களை கல்வெட்டில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் மணிக் குமார் மற்றும் சுப்பிர மணியம் பிரசாத் அமர்வு முன்பு புதனன்று நடை பெற்றது. இந்த வழக்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. அதில், பெரியார் உயி ருடன் இருக்கும்போதே தனக்குத்தானே சிலை வைத்து, இதுபோன்ற வாசகங்கள் பொறித்த பல கல்வெட்டுகளையும் அவரே திறந்து வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுபோன்ற வாசகங்களை பெரியார் பேசிய ஆதரங்கள் உள்ளன எனக் கூறி வழக்கை தள்ளு படி செய்து உத்தரவிட்டனர்.

;