tamilnadu

img

கொரோனாவிலும் தொடரும் குருதிக்கொடை...

“ஹலோ சார்... வாலிபர் சங்க செயலாளர் ஏழுமலைங்கலா...”
“ஆமாங்க...”

“உங்களால எங்களுக்கு ஒரு மிகப்பெரிய உதவி வேணும். வாய்  புற்றுநோயால் திருச்சி மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கும் மேகநாதன் என்பவருக்கு மருந்து  கொடுக்கணும். அவர் பயன்படுத்து வது சித்த மருந்து. இந்த மருந்து கள்ளக்குறிச்சியில் இருக்கிற சித்த மருத்துவர் கோபிநாத் என்பவரிடம் இருக்கு. நான்கு நாட்களாக முயற்சி பண்றோம். கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் மருந்து வாங்க முடியல. அதனால இந்த மருந்தை வாங்கி திருச்சிக்கு கொண்டு வந்து  சேர்க்கணும் சார். அவசர காலத்துல  மக்கள் பணியாற்றும் அமைப்பு வாலி பர் சங்கம் என்று நான் கேள்விப்பட்டி ருக்கிறேன். தயவுசெய்து உத வுங்கள்”

இப்படி பேசிய குரலுக்கு சொந்தக்  காரர் திருச்சியில் பணியாற்றும் மருத்துவர் மணிமேகலை. உடனடி யாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் வி.ஏழுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாத னிடம் பேசினார். அவர் வழியில் உள்ள  காவல் சோதனைச் சாவடிகளில் விஷ யத்தை விளக்கி தடை இல்லாமல் மருந்து கொண்டு செல்ல அறிவுறுத்தி னார். உரிய மருந்து உரிய இடத்திற்கு  வாலிபர் சங்கத்தினரால் கொண்டு போய் சேர்க்கப்பட்டு மேகநாதனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் ஏழுமலையை தொடர்பு  கொண்ட மருத்துவர் மணிமேகலை யும், சிகிச்சை பெற்ற மேகநாதனின் குடும்பத்தாரும் மனம் நெகிழ்ந்து கூறிய நன்றி வார்த்தைகளில் விவ ரிக்க இயலாது.

கேட்டது 15.. கொடுத்தது 27..

ஏப்ரல் 23 ஆம் தேதி சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து அழைப்பு. “நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. பல குரூப் ரத்தம்  இருப்பு இல்லை. எனவே அவசரமாக  15 யூனிட் இரத்தம் தேவை. வாலிபர்  சங்கத்தின் மூலம் உதவி செய்யுங் கள்” என்பது அந்த அழைப்பில் வந்த செய்தி.

உடனடியாக உரிய திட்டமிடலு டன் சென்ற வெண்கொடி வீரர்கள் தங்கள் உடலிலிருந்து கொடுத்த ரத்தம் 27 யூனிட். அசந்து போனர்  மருத்துவர்கள். இவர்கள் குருதி யளித்த தினம் குடிநீருக்காக போராடி  சமூக விரோதிகளால் வெட்டி வீசப்பட்டு குருதி சிந்தி உயிர் நீத்த மதுரை லீலாவதி தாயின் நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது. வாயால் வடை சுடும் மோடி அரசின்  மார்ச் 25 முதலான ஊரடங்கு அறி விக்கப்பட்டது முதல் ஸ்தம்பித்து போன தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியே கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனையில் இருந்து ரத்தம் கோரி வந்த அழைப்பை ஏற்று பல பத்து  யூனிட் ரத்தம் கொடுத்தனர் வெண் கொடிக்கு சொந்தக்காரர்கள். இதோ தற்போது மே 11ஆம் தேதி  திங்களன்றும் கள்ளக்குறிச்சி அரசு  மருத்துவமனையில் ஏழை எளிய மக்க ளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் ரத்தம் கொடுத்து மருத்துவமனை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட சான்றி தழ்களை பெற்றனர் வாலிபர் சங்கத் தின் தோழர்கள்.

இதேபோல் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.கே. பழனி தலைமையில் மருத்துவர்க ளின் கோரிக்கையை ஏற்று ரத்த  தானம் செய்யப்பட்டது. கொரோனா வின் பீதியால் ரத்த உறவுகளே பிரிந்து  விட்ட சூழலில் உறவற்றவர்களுக்கும் ரத்தம் கொடுத்து உறவாக உரு வாக்கிய வாலிபர் சங்கத்தினரை மருத்  துவ உலகம் பாராட்டி மகிழ்ந்தது.

பத்தும் பறக்கும்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாகலூர், கொசப்பாடி, அரசம் பட்டு, பாவளம், மல்லாபுரம், புதுப்  பாலப்பட்டு, ரங்கப்பனூர், கரை யாம்பாளையம், பெரியகொள்ளியூர், பழையசிறுவங்கூர், மாத்தூர் என  பல கிராமங்களில் துப்புரவு பணி யாளர்கள், அங்கன்வாடி ஊழி யர்கள், ஏழை-எளிய குடும்பத்தினர், சிறுபான்மை மக்கள் மற்றும் கோவை யிலிருந்து திருமணத்திற்கு கள்ளக்  குறிச்சி வந்து ஊரடங்கில் மாட்டிக்  கொண்ட 16 பேர் என 633 குடும்பங்க ளுக்கு உணவும், 333 நபர்களுக்கு புதிய முக கவசம், கையுறை, கபசுர குடிநீர் வழங்கியதோடு சுமார் 150  வாலிபர் சங்க தோழர்களை ரத்த தானத்தில் ஈடுபடுத்தியுள்ளது டிஒய்எஃப்ஐ.

இதோடு மட்டுமல்ல; பல கிரா மங்களில் தொடர்ந்து பலநாட்கள் கிருமி நாசினி தெளித்து நோய்த் தொற்று ஏற்படாமல் மக்களை பாது காத்தது என இப்படி பேரிடர் காலத்தில்  வாலிபர் சங்கத்தினரால் நிவாரண பணி மற்றும் சமூக சேவையில் ஈடுபட  முடிந்தது என்றால் இதற்கான காரணம்  ஒன்றாகத்தான் இருக்க முடியும். அது  அச்சங்கத்தின் சமத்துவ சமுதா யத்தை நோக்கிய கொள்கைதான்.

-வி.சாமிநாதன்