புதுச்சேரி கருத்தரங்கில் கே. பாலகிருஷ்ணன் சாடல்
புதுச்சேரி, நவ. 22- மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதே மத்திய பாஜக அரசின் குறிக் கோளாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் குற்றம் சாட்டினார். கேரள திருவனந்தபுரம் குலாட்டி இன்ஸ்டியூட் ஆப் பைனான்ஸ், டேக்சேஷன், புதுச்சேரி மண்டல சமூக அறிவியல் நிறுவனமும் இணைந்து “இந்திய கூட்டாட்சியிலுள்ள சவால்கள்” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கை புதுச்சேரி யில் நடத்தின. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கே.பாலகிருஷ்ணன், “புதுச்சேரி முதலமைச்சர் நாராயண சாமி 24 மணி நேரமும் துணை நிலை ஆளுநரின் தொந்தரவுக்கு ஆளா கிக்கொண்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை துணை நிலை ஆளுநரை வைத்துக் கொண்டு கட்டுப்படுத்த முடியும் என் றால் அது ஜனநாயகத்தை கேலிக்கூத் தாக்கும் செயலாகும்.அதிகாரிகளை மாற்றுவதற்கு கூட முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரம் இருக்காது அரசின் திட்டங்களை நிறை வேற்றக் கூட முடியாது” என்றார்.
அரிசி கொடுக்க வேண்டுமா? அல்லது பணம் கொடுக்க வேண்டுமா? என்பதைக் கூட ஆளுநர்தான் தீர்மா னிக்க வேண்டுமா? இதை சாதாரண மாக விவாதித்தால் போதாது. ஒரு மாநி லத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கம் இருக்கும்போது, அதனை கட்டுப்படுத்துகின்ற ஆளுநர் பதவி தேவையானதா? என்ற விவாதம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆளுநர் பதவிக்கு மாறாக ஏதா வது ஒரு வழிகாட்டுதல் என்கிற அடிப் படையில் மத்திய அரசு ஒரு அதி காரியை வைத்துக் கொள்ளட்டும். ஆனால், ஒரு ஆளுநர் தான் எல்லா வற்றையும் தீர்மானிப்பார் எனில் அரசாங்கம் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றினால் கூட ஆளுநர் பெயரில் தான் அதனை வெளியிட முடியும் என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கம் என்ற தோற்றம் மட்டுமே இருக்கும். உண்மையில் ஆளுநர் அரசாங்கமாகத்தான் இருக் கும். எனவே தான் அரசியல் சட்டம் நமக்கு வகுத்துத் தந்துள்ளதையும் பரி சீலிக்க வேண்டும் எனவும் பால கிருஷ்ணன் தெரிவித்தார். மொத்த வருவாயில் மாநிலங்க ளுக்கு அதிக பங்கீடு கொடுப்பதற்கு மாறாக, படிப்படியாக அதனை குறைக்கும் மத்திய பாஜக அரசின் நோக்கமே மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதாக உள்ளது. மாநி லங்களின் உரிமையை பறிப்பது, மாநி லங்களை அழிப்பது என்பது வெறும் அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. ஒரு நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு என அறிமுகப்படுத்தி, கடைசி யாக ஒரே பட்ஜெட் என்பதன் மூலம் இந்தியா என்ற பன்முகத் தன் மையை அழித்துவிட்டு, இந்தியாவை ஒற்றை கலாச்சாரமாக மாற்றக் கூடிய திசையின் வழியில் செல்கின்ற னர். இந்த தாக்குதலை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றும் பால கிருஷ்ணன் வேண்டுகோள்விடுத்தார்.
மோடியின் ஓரவஞ்சனை!
முன்னதாக வரவேற்று பேசிய முதல்வர் நாராயணசாமி,“யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் 15வது நிதிக்குழு வில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியும், தில்லியும் நிதிக்குழு வில் சேர்க்கப்படவில்லை. புதுச் சேரியை நிதிக்குழுவில் சேர்க்க பிரத மர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் என பலரையும் சந்தித் தேன். இதுவரை செயல்படுத்தாமல் புதிதாக பிரித்த மாநிலத்தை மட்டும் சேர்த்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.
தொடக்கத்தில் புதுச்சேரிக்கு 70 சதவீதம் மத்திய அரசு நிதி கிடைத்து வந்தது. தற்போது 30 சதவீதம் மட்டுமே கொடுக்கிறது. அதிலும் அரசுக்கு கிடைப்பதோ 26 சதவீதம்தான் கிடைக் கிறது. மக்கள் நலத்திட்டங்களை நிறை வேற்றும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளதால் பல்வேறு சிரமங்களுக்கி டையே 11.4 சதவீதம் புதுச்சேரி வளர்ச்சி யடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். அதேபோல் மக்கள் நலத்திட்டங்க ளுக்கு நிதி ஒதுக்கீட்டின்போது யூனி யன் பிரதேசமாக கருதுகிறது. எங்களி டம் வளம் உள்ளது. நிதியில்லாமல் பல் வேறு சிக்கல்களில் தவிக்கிறோம். மத்திய அரசிடமிருந்து போதிய ஆத ரவு எங்களுக்கு கிடைக்கவில்லை. என்று குறிப்பிட்டார்.
இறையாண்மைக்கு எதிராக....
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய மக்களவை உறுப்பி னர் கனிமொழி,“மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவமே திமுகவின்செயல்பாடு. அதை நோக்கி குரல் எழுப்புகிறோம். ஆனால் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக திமுகவை காட்டும் போக்கும், சிக்க லையும் உருவாக்குகிறார்கள்” என்றார். ஜிஎஸ்டி வரி வருவாயை எடுத்துக் கொண்டு, அதற்கான மாநில அரசு களின் பங்குகளை தரவில்லை என்பது ஒருபுறம் இருக்க மக்களவை உறுப்பி னர்களுக்கான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் தொகுதி மேம்பாட்டுப் பணி முடித்தும் நிதியை வழங்க முடியாத சூழல் நிலவு கிறது என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ஜம்மு காஷ்மீர் முன்னாள் நிதி அமைச்சர் ஹசீப், கேரள நிதி நிறுவன இயக்கு நர் பேராசிரியர் கே.ஜே. ஜோசப், புதுச் சேரி சமூக அறிவியல் நிறுவன மண்டல இயக்குநர் வி.செல்வம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரதி நிதிகள், பல்கலைக் கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.