tamilnadu

img

150 ஆண்டுக்கும் மேலாக வவ்வால்களை பாதுகாத்து வரும் பெரம்பூர் கிராம மக்கள்

சீர்காழி:
கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தில் வவ்வால்களை காக்கும் கடவுளாக நினைத்து மக்கள் பாதுகாத்து வருகின்றனர். பாலூட்டி வகைகளில் முதுகெலும்புள்ள பறக்கவல்ல ஒரே விலங்கு வவ்வால், உலகம் முழுவதும் 2 ஆயிரம் வகைகளில் வவ்வால்கள் உள்ளன. பெரும்பாலும் இவை இரவில் பழம் திண்ணிகளாகும். இவைகளின் முகம் நரியைப் போன்று இருப்பதால் பறக்கும் நரி என்றும் இதற்கு பெயர் உண்டு. இரவுநேரங்களில் 48 கிமீ தூரம் வரை இரைதேடி பயணிக்கும். இருளில் முன்னிருக்கும் பொருட்களை கவனிக்க வவ்வால்களுக்கு மீயொலி அலைகள் உதவுகின்றன. 

மனிதர்களில் 20 முதல் 80 ஆயிரம்அதிர்வெண் அளவுள்ள ஒலி அலைகள் மட்டுமே உணர முடியும். ஆனால் வவ்வால்களின் தொண்டையிலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் அதிர்வெண் அளவில் ஒலி அலைகள் உண்டாகின்றன. இதனால் வேகமாக பறந்து செல்லும் போது 17 மீட்டர் தொலைவில் உள்ள தடையை உணர்ந்து அதற்கேற்ப பறக்கும் திறன் கொண்டவை.இப்படி சிறப்பு மிக்க வவ்வால்களை கண்டு கொரோனா என்ற அச்சம் சிலருக்குஇருந்தாலும் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராம மக்கள் வவ்வால்களை காக்கும் கடவுளாக நினைத்து பாதுகாத்து வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் விவசாயம் முப்போக சாகுபடி செய்யப்பட்டு வரும் வயல்களின் நடுவே அமைந்துள்ள இடத்தில் பெரிய ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான பழந் திண்ணி வவ்வால்கள் வசித்து வருகின்றன.

கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாகஇங்கு வவ்வால்கள் வசித்து வருவதால் இந்த இடத்திற்கு வவ்வாலடி என்றுபெரம்பூர் கிராம மக்கள் அழைக்கின்றனர். இந்த வவ்வால்களை இவ்வூர் கிராமமக்கள் காக்கும் கடவுளாக நினைத்துபாதுகாத்து வருகின்றனர். வவ்வால்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறும் பாதுகாத்து வருகின்றனர். இக்கிராமத்திற்குள் வெளியாட்கள் யாரும் அனுமதியின்றி நுழைய முடியாதுஇங்குள்ள இளைஞர்கள் குழுவாக இருந்து வவ்வால்களை பாதுகாத்து வருகின்றனர். இந்த வவ்வால்கள் இந்தகிராமத்தில் இருப்பதால் தான் எந்தநோய் நொடியும் இன்றி ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதல்களால் வவ்வால்களைக் கொண்டு உலக நாடுகள்அஞ்சும் நிலையில் அந்த வவ்வால்களால் தான் மூன்று தலைமுறைகளாக தாங்கள் ஆரோக்யமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதாக கூறும் பெரம்பூர் கிராம மக்கள், தீபாவளி பண்டிகை  அன்று வவ்வால்களின் பாதுகாப்புக் கருதி பட்டாசு வெடிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.

;