தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை,மே 27- கொரோனா ஊரடங்கு உத்தர வால் ரயில் போக்குவரத்து நாடு முழு வதும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள், ஊழியர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. 15 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப் பட்டது. ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 எக்ஸ்பிரஸ் ரயில்களையும் இயக்க ரயில்வே தயாராக உள்ளது.
ரயில்கள் இயக்குவது தொடர்பாக எந்த நேரத்தில் அறிவிப்பு வந்தா லும் அதற்கேற்றவாறு ரயில் சேவை தொடங்க, அனைத்து ஏற்பாடுகளை யும் தெற்கு ரயில்வே செய்துள்ளது. இதற்காக ரெயில் பெட்டி களை தயார் நிலையில் வைக்கும் வகையில் அதன் பாதுகாப்புகளை ஆய்வாளர்கள் உறுதிசெய்கிறார்கள். கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்றி, ரெயில் சேவையை தொடங்குவதற்கு ஏற்ப அனைத்து முன் னேற்பாடுகளையும் செய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், பல்வேறு மாநிலங்களுக்கு பெட்டி கள் சென்றுள்ளன. ஆனாலும் பயணி கள் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கு வதற்கு தேவையான பெட்டிகளை சேகரித்து வருகிறோம். ஏ.சி. பெட்டி கள் மற்றும் சாதாரண பெட்டி களின் பாதுகாப்புகள் ஆய்வு செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து பயணிகள் ரயில் சேவை யை தொடங்க வாய்ப்பு குறை வாகவே உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், ரயில் சேவையை சென்னையில் தொடங்கு வது குறித்து அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி செயல்படுத்தப் படும்.
ரயில் சேவை இயக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் குறைந்த அள வில் சேவை தொடங்க தயாராக இருக்கிறோம். சமூக இடைவெளி யுடன் பெட்டிகளில் பயணிகள் பய ணிக்க தேவையான வழிமுறைகளை பின்பற்ற உள்ளோம். மின்சார ரயில்களில் சமூக இடை வெளியை பின்பற்றுவது சவாலாக இருக்கும். இதற்காக ரயில்வே துறை பல்வேறு வழி நெறிமுறைகளை வகுத்துள்ளது. நீண்ட தூரம் செல்லக் கூடிய ரயில்களை குறைந்த அளவு இயக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.