tamilnadu

img

மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை, ஜூன் 18- கொரோனா தொற்று அதி கரித்து வரும் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களை நியமித்து அரசு உத்தர விட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதி காரிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு, திரு வள்ளூர், காஞ்சிபுரத்திற்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதி காரி உதயசந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன் ஐ.ஏ.எஸ். மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.  தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். கடந்த சில நாட் களுக்கு முன், வணிக வரித்துறைச் செயலாளராக நியமனம் செய்யப் பட்டார். தற்போது அவரை கிரு ஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நிய மித்து தமிழக அரசு  உத்தர விட்டுள்ளது.