tamilnadu

img

கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிவித்திடுக!

தமிழகம் முழுவதும்  மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 23- தமிழகம் முழுவதும் வட்டார அளவில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப் படுத்தி, பரிசோதனை முடிவுகளை உடனுக்கு டன் மக்களுக்கு தெரிவிக்குமாறு வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜூலை 23 வியாழனன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஜூலை 23, விடுதலைப் போராட்ட வீரரும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் படைத் தளபதிகளில் ஒருவரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் கேப்டன் லட்சுமியின் நினைவு நாள்  ஆகும். மருத்துவரான அவர், தனது வாழ்நாள்  முழுவதும் சமூக, அரசியல் மற்றும் மருத்துவத் துறையில் எளிய மக்களுக்காகவே அர்ப்பணித்தார். அவரது மகத்தான சேவை களை நினைவுகூரும் விதமாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக கிராமங்களில் அடிப்படை மருத்துவ சேவையை செய்ய வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையங்களும், துணை சுகாதார நிலையங்களும் பல்வேறு இடங்களில் மூடப்பட்டுள்ள நிலைமை ஆபத்தா னது என்று அரசுக்கு உணர்த்தும் விதமாகவும் மாதர் சங்கம் இப்போராட்டத்தை நடத்தியது.

மத்திய - மாநில அரசுகள் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்; கொரோனா பரிசோதனை மையங்களை வட்டார அளவில் அதிகப்படுத்தி பரிசோதனை முடிவு களை சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனுக்கு டன் தெரிவிக்க வேண்டும்; பிரசவம் உள்ளிட்ட பொது மருத்துவத்திற்கு வரும் நோயாளி களுக்கு சிகிச்சை மறுக்கக்கூடாது; தொற்று அதி கரிப்புக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்களை கூடுதலாக பணிநியமனம் செய்ய வேண்டும்; மாநில அரசு கொடுத்த வாக்குறுதியின் அடிப் படையில் சுகாதார ஊழியர்கள் அனை வருக்கும் ஊக்கத்தொகையாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும்; தனியார் மருத்துவமனைகள் இயங்குவதை  உறுதிப் படுத்த வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. கட லூரில் 26 மையங்கள், ஈரோட்டில் 23 மையங்கள், மதுரை மாநகரில் 22 மையங்கள், வேலூர், கோவை, மதுரை புறநகரில் 11 மையங்கள், விருதுநகரில் 13 மையங்கள், சேலத்தில் 10 மையங்கள், நாகையில் 8 மையங்கள், திண்டுக் கல்லில் 7 மையங்கள், திருவாரூரில் 9 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இப்போராட்டம் நடைபெற்றது.  மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி மற்றும் நிர்வாகி கள் பல்வேறு இடங்களில் பங்கேற்றனர்.

;