tamilnadu

img

விவசாயத் தொழிலாளர்கள் 3000 கிராமங்களில் போராட்டம்

நூறுநாள் வேலை - நிவாரணம் வழங்கிடுக!

சென்னை, மே 12- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலை - வருமானம் இழந்து தவிக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ.7500 நிவாரணம் மற்றும் நூறுநாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி களில் மனு அளிக்கும் போராட்டம் செவ்வாயன்றும் மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மத்திய -மாநில அரசுகளால், ஊரடங்கு இரண்டு மாதங்களுக்கு மேல் அமல்படுத்தப்படுகிறது. விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அன்றாடம் உழைத்து வாழ்க்கை நடத்தும் குடும்பங்களைப் பாது காக்க ஆக்கப்பூர்வமான உதவிகள் செய்வதற்கு மாறாக, வெறும் ஊரட ங்கை மட்டும் அரசு நீட்டித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களுக் கான உணவை உத்தரவாதப் படுத்தாமலும், வேலைவாய்ப்பு கள் குறித்து தேவையான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படாததால் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மாதத்திற்கு ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும். ஊரக வேலைத்திட்டத்தை உடன் துவங்கி, அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நிபந்தனையின்றி தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு முப்பது நாட்களுக்கான தினக்கூலியை நிவாரணமாக வழங்க வேண்டும்.

பொதுவிநியோகக் கடை களில் வழங்கப்படும் அரிசியை 30கிலோவாக உயர்த்தி வழங்கு வதுடன், தரமாகவும் ஒரே சமயத்தில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும். மளிகை பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். குடிநீர் சுகாதாரம் உள்ளிட்டப் பணிகளை முழுமையாக கிராமங்களில் வழங்கிட உள்ளாட்சி மன்றங்களுக்கு அரசு போதிய அளவில் நிதி உதவிசெய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஊராட்சிகளில் மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த கோரிக்கை மனுக்களை முதலமைச்சருக்கு அனுப்பிட ஊராட்சி ஒன்றிய ஆணையர்களிடமும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

மதுரை மாவட்டம் குலமங்கலம் ஊராட்சியில் மாநிலத் தலைவர் ஏ.லாசர், நாகப்பட்டினம் மாவட்டம் வாட்டாக்குடி ஊராட்சியில் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், புதுக்கோட்டை மாவட்டம் ஒடுகம்பட்டி ஊராட்சியில் பொருளா ளர் எஸ்.சங்கர், மாநில செயலா ளர்கள் எம்.சின்னதுரை, தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம், அ. பழனிசாமி, திருச்சி மாவட்டம் பண்பு  அறம் சுற்றியில், மாநில துணைத் தலைவர் பி.வசந்தாமணி, திண்டுக்கல் மாவட்டம் தங்கச்சியம்மாபட்டி ஊராட்சிகளிலும் கலந்து கொண்ட னர். இந்தப் போராட்டங்களில் ஆயி ரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர். 

ஏ.லாசர் கண்டனம்

மதுரை மாவட்டம் குலமங்கலம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கிராம ப்புற விவசாயக்கூலித்தொழிலா ளர்கள், மாநிலத் தலைவர்  ஏ.லாசர், மாவட்ட செயலாளர் சொ.பாண்டி யன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் தலைவர்களுடன் ஊராட்சிமன்றத் தலைவர் பேச்சு வார்த்தை நடத்தினார். அலு வலகத்திற்குள் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த சமயத் தில், வெளியில் போராட்டத்தில் கூடி யிருந்த பெண் தொழிலாளர்கள் சிலரை அலங்காநல்லூர் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது தொழி லாளர்களை கைது செய்வது அராஜக மான நடவடிக்கை என்று கூறி கண்டனம் தெரிவித்த ஏ.லாசர் உள்ளிட்ட தலைவர்கள் உடனடி யாக அலங்காநல்லூர் காவல்நிலை யத்திற்கு விரைந்தனர். இத்தகவல் அறிந்து, கைது செய்யப்பட்ட தொழி லாளர்களை காவல்துறையினர் விடுவித்தனர். 

இதுதொடர்பாக ஏ.லாசர் கூறு கையில், ஊரடங்கு விதிகளை அப்பட்டமாக மீறி டாஸ்மாக் கடை களில் ஆயிரக்கணக்கில் கூடி யவர்களை காவல்துறை எங்கும்  கைது செய்யவில்லை. ஆனால் இங்கே பசியால் வாடிக்கொண்டி ருக்கும் விவசாயத் தொழிலாளர்கள் உரிய தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிகளை கடைப்பிடித்து போராடினார்கள். ஆனால் அவர் களை, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அலங்கா நல்லூர் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றது அநியாயமானது. இத்தகைய செயல் கண்டனத்திற்கு உரியது என்று கூறினார்.

 

 

;