மதுரை:
ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. பொதுத்துறைகளான பாதுகாப்பு, பெட்ரோலியம், விஞ்ஞானம், இன்சூரன்ஸ், ஏர் இந்தியபோன்ற துறைகளை கார்ப்பரேட்களுக்கு காவு கொடுக்கக் கூடாது. ரயில் கட்டணத்தை உயர்த்தும நாசகார முடிவை அமல்படுத்தக்கூடாது. தொழிற் சங்கங்கள் ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களை அழிக்கக்கூடாது. ரயில்வேக்கு தனி பட்ஜெட்டை உருவாக்க வேண்டும். படித்த இளைஞர்களின் அரசுவேலை வாய்ப்புக்களை தனியார்மயமாக்கக் கூடாது ரயில்வேஆட்சேர்ப்பை (Railway Recruitment cell) ஐ முடக்கக் குடாது. விவசாயியையும், விவசாயத்தையும் பாதிக்கும் வேளாண்மை திருத்த மசோதாக் களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி டிஆர்இயு தலைமையில் மதுரையில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உதவிக் கோட்டச் செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓபன்லைன் செயலாளர் ஜெயராஜசேகர், கோட்டப் பொருளாளர் சிவக்குமார், கோட்டச் செயலாளர் ஆர்.கண்ணன், துணைப் பொதுச்செயலாளர் ஆர். திருமலை ஐயப்பன், கோட்டச்செயலாளர் ஆர். சங்கர நாராயணன்,உதவிக் கோட்டச் செயலாளர் பி.கணேசன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.